/* */

அரியலூரில் இளைஞர் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்

அரியலூரிலுள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில், இளைஞர் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அரியலூரில் இளைஞர் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்
X

அரியலூரில் இளைஞர் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி மாநில துணைத் தலைவர் ஜி.ராஜேந்திரன் பேசுகிறார்.




அரியலூரில் உள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில், இளைஞர் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவர் சங்கர் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஜி.ராஜேந்திரன் கலந்து கொண்டு, இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் மாநிலத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் விச்சு(எ)லெனின்பிரசாத், மாவட்டத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் எம்.கே.எஸ்.புகழ் ஆகியோரை அறிமுகப்படுத்தினார்.

வரும் நகரப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து களப் பணியாற்றி வேட்பாளர்களை வெற்றிப் பெறச் செய்ய வேண்டும் என மாநில துணைத் தலைவர் ஜி.ராஜேந்திரன் தெரிவித்தார்.

வட்டாரத் தலைவர்கள் சீமான், திருநாவுக்கரசு,மனோகரன்,முத்துசாமி, சீனிவாசன் மற்றும் மாவட்ட துணைத் தலைவர்கள் தியாகராஜன், ராகவன்,பவானிசிவா,அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகர தலைவர் எஸ்.எம்.சந்திரசேகர் வரவேற்றார். முடிவில் மாவட்ட செய்தித் தொடர்பாளர் மா.மு.சிவக்குமார் நன்றி தெரிவித்தார்.

Updated On: 21 Nov 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்