/* */

விரால் மீன் வளர்ப்பிற்கு இடுபொருள் மானியம்: அரியலூர் கலெக்டர் அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் விரால் மீன்வளர்ப்பினை ஊக்குவித்திட இடுபொருள் மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

விரால் மீன் வளர்ப்பிற்கு இடுபொருள் மானியம்: அரியலூர் கலெக்டர் அறிவிப்பு
X

விரால் மீன் வளர்ப்பிற்கான பண்ணைக்குட்டை.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேசிய வேளான் அபிவிருத்தி திட்டம் 2020-21ன்கீழ், விரால் மீன்வளர்ப்பினை ஊக்குவித்திட இடுபொருள் மானியம் வழங்குதல் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாட்டில் விரால் மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ள பயனாளிகளால் ஏற்கனவே 1000 ச.மீ. பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைகுட்டைகளை புனரமைத்திடவும் மற்றும் விரால் மீன்வளர்ப்பு செய்திட ஆகும் உள்ளீட்டு செலவினம் ஆக மொத்தம் ரூ.75000/-ல் 40 சதவீதம் மானியமாக ஒரு அலகிற்கு ரூ.30,000/- மானியமாக வழங்கிட ஒப்பளிப்பு பெறப்பட்டுள்ளது.

எனவே இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் அரியலூர் மாவட்ட உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, அறை எண்.234, இரண்டாவது மேல் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், அரியலூர்.621 704, தொலைபேசி எண்.04329 - 228699 தொடர்பு கொள்ளவும். மேலும் இதற்குரிய விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 30 Nov 2021 11:02 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  2. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  3. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  6. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  9. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  10. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...