/* */

குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு பற்றிய ஆய்வு கூட்டம் நடந்தது.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி முன்னிலையில் இன்று (24.05.2022) நடைபெற்றது.

அரியலூர் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஆய்வினை 23.05.2022 மற்றும் 24.05.2022 ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் ஆய்வு மேற்கொண்டார். இதில் 23.05.2022 அன்று அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் இல்லம் மற்றும் சிறப்பு தத்துவத்தினை ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது இல்லம் இளைஞன் நீதி சட்டம் 2015ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் குழந்தை இல்லத்தின் ஒரு கட்டடைப்பினையும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் குழந்தைகளுக்கு தரமான சேவைகள் செய்திடவும் ஆலேசானைகள் வழங்கினார்.

மேலும், இன்றைய தினம் நடைபெற்ற இக்கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுத்திட சிறப்பு திட்டங்கள் தீட்டி பணி புரிந்த இடமும் குழந்தை திருமணத்தால் ஏற்படும் உயிர் இழப்பை தடுத்திடவும் புதிய உத்திகளை கையாண்டு இது போன்ற சமூக அவலங்களை தடுத்து குழந்தைகள் சிறப்பான கல்வி கற்று உயர்பதவி இலக்கை அடையும் வரை நாம் சிறப்பாக பணியாற்றிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை கூறினார். கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து அரசு நிவாரண உதவிகள் வழங்கப்பட்ட விபரங்கள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் முரளி, மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்ததலைவர் ராமராஜ், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அழகேசன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமேணி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.கீதாராணி, மாவட்ட சமூக நல அலுவலர் சாவித்ரி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் அன்பரசி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 24 May 2022 1:54 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்