/* */

உச்சநீதிமன்றத்தையோ, தேர்தல் ஆணையத்தையோ சந்திப்பதற்கான வாய்ப்பு இல்லை - வைத்தியலிங்கம்

தற்போதுள்ள சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தையோ, தேர்தல் ஆணையத்தையோ சந்திப்பதற்கான வாய்ப்பு இல்லை: ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம்.

HIGHLIGHTS

உச்சநீதிமன்றத்தையோ, தேர்தல் ஆணையத்தையோ சந்திப்பதற்கான வாய்ப்பு இல்லை - வைத்தியலிங்கம்
X

ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் அரியலூரில் தவத்தாய் குளம் அருகே ரவுண்டானா சந்திப்பில் செய்தியாளர்களை சந்தித்தார்.

சென்னையிலிருந்து தஞ்சைக்கு சென்ற ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் அரியலூரில் தவத்தாய் குளம் அருகே ரவுண்டானா சந்திப்பில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தற்போது உள்ள சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தையோ, தேர்தல் ஆணையத்தையோ சந்திப்பதற்கான வாய்ப்பு இல்லை. மூன்று, நான்கு நாட்களுக்கு பிறகு கட்சியை எவ்வாறு வழிநடத்தி செல்வது என்பது குறித்து ஆராய்ந்த பின் முடிவு செய்யப்படும்.

கட்சிப் பிரச்சனையில் நீதிமன்றம் தலையிட்டு வந்துள்ளது. பொதுக்குழு சம்பந்தமான பிரச்சனைகளில் நீதிமன்றம் தான் தலையிட்டது. கட்சிப் பிரச்சனைகளில் தேர்தல் ஆணையமும் தலையிடும். கட்சி பிரச்சனைகளில் நீதிமன்றமோ, தேர்தல் ஆணையமோ தலையிட முடியாது என்று சொல்ல முடியாது. சசிகலாவை சந்திப்பது குறித்து கேட்டபோது இந்த கேள்விக்கு தற்போது பதில் இல்லை என கூறினார்.

முன்னதாக அரியலூர் வந்த ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கத்திற்கு அதிமுக கட்சியினர் வெடி வெடித்து பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளித்தனர். மேலும் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Updated On: 24 Jun 2022 2:18 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  3. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  4. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  5. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  8. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  9. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  10. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்