/* */

ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
X

பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் கொ.வெற்றிவேலன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் டி.பிரகாஷ் முன்னிலை வைத்தார். மாவட்ட பொருளாளர் பி.செல்வம் வரவேற்றார்.

முன்னதாக, உலக தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் சார்பாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை துவங்கி சக்தி சாலை வரை மே நாள் ஊர்வலம் நடைபெற்றது.

பெயிண்டிங் வேலைகளை கார்ப்பரேட் கம்பெனிகளிடமிருந்து மீட்டு கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்கவும், பெயிண்டிங் ஒப்பந்ததாரர்கள் தொழிலாளர்களுக்கு என தனி நல வாரியம் அமைக்க அரசிடம் வலியுறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஊர்வலம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்ட கட்டிடப் பொருட்கள் விற்பனையாளர் சங்க கட்டிடத்தில் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ் எம் ஜோசப் ராஜா நன்றி கூறினார். இக்கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட பெயிண்டிங் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 6 May 2024 3:30 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...