/* */

அரியலூரில் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணைத்தொகை

அரியலூரில் கோவிட் காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் கருணைத்தொகை பெற விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அரியலூரில் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணைத்தொகை
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் கோவிட் -19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணைத்தொகை வழங்குவதற்கு இணைய தளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு, மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதிசெய்யும் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டுவருகிறது. இதுவரை 570 மனுக்கள் பெறப்பட்டு 513 இனங்களுக்கு ரூ.50,000/- வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 50 மனுக்கள் இருமுறை பெறப்பட்ட மனு மற்றும் இதர என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது. மீதமுள்ள 7 மனுக்கள் விசாரனையில் உள்ளது.

இந்நிலையில், மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழக்குஎண். I.A.No. 40111/2022 in M.A.No. 1805/2021 in W.P N.o. 539/2021, நாள் 20.03.2022-ல் வழங்கிய தீர்ப்பில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 20.03.2022-க்கு முன்னர் ஏற்பட்ட கோவிட் -19 இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் வரும் 60 நாட்களுக்குள் (18.05.2022 தேதிக்குள்) மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும். 20.03.2022 முதல் ஏற்படும் கோவிட்-19 இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 தினங்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகம் 30 தினங்களுக்குள் தீர்வுகாண வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள காலக் கெடுவிற்குள் நிவாரணம் கோரிமனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் அதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவினை ஒவ்வொரு இனமாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும்.

எனவே கோவிட்-19 தொற்று நோயின் காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் மேற்கண்ட உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, உரிய காலத்தில் முன செய்து நிவாரணம் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 14 April 2022 9:01 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    மதுரை அருகே சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆலய விழா
  2. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
  3. திருவள்ளூர்
    மஞ்சாக்கரணையில் பஞ்சு கிடங்கில் தீ விபத்து
  4. உசிலம்பட்டி
    சர்வதேச யோகா தினம்; உசிலம்பட்டி போலீசாருக்கு மன அமைதி பயிற்சி
  5. உசிலம்பட்டி
    உசிலம்பட்டியில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
  6. பொன்னேரி
    ஒரு நிமிடம் 58 விநாடிகளில், 500 மீட்டர் கடந்து சைக்கிளிங்கில் 4 வயது...
  7. வீடியோ
    🔴LIVE : பிரதமர்மோடி G7 உச்சி மாநாட்டில் பங்கேற்பு | #g7summit #pmmodi...
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 848 கன அடியாக அதிகரிப்பு..!
  9. சேலம்
    மேட்டூர் அணை நீர்மட்டம் 42 அடியாக சரிவு..!
  10. செய்யாறு
    நெகிழி கழிவுப் பொருள்கள் சேமிப்பு குடோனில் தீ விபத்து