/* */

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் நலத்திட்டங்களை எம். எல். ஏ. துவக்கினார்

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் நலத்திட்டங்களை எம்.எல்.ஏ. கண்ணன் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் நலத்திட்டங்களை எம். எல். ஏ.  துவக்கினார்
X

புதிதாக திறக்கப்பட்ட கட்டிடங்களில் கண்ணன் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றினார்.

ஜெயங்கொண்டம் நகரில் ரூபாய் 17.26 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நில அளவையர் குடியிருப்பு, ஜெயங்கொண்டம் ஒன்றியம், குண்டவெளி ஊராட்சி,மீன்சுருட்டியில் ரூபாய் 17.26 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நில அளவையர் குடியிருப்பு, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.

ஜெயங்கொண்டம் ஒன்றியம்,கங்கைகொண்டசோழபுரம் ஊராட்சி, மேட்டுப்பாளையம் கிராமத்தில் ரூபாய்.299 லட்சம் மதிப்பீட்டில், புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டுமான பணி,

ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றியம், சலுப்பை, தண்டலை ஊராட்சி வடவீக்கம், இடையார் ஆகிய ஊராட்சிகளில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 12.98 லட்சம் மதிப்பீட்டிலான சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணியினை, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றியம் அங்கராயநல்லூர் ஊராட்சியில், 14-வது நிதிக்குழு மான்யம் திட்டத்தின் கீழ் 9.80 லட்சம் மதிப்பீட்டில் 60000 லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் உத்திரடிகுடி ஆதிதிராவிடர் காலனியில் ரூ. 5.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சுகாதார வளாகம் ஆகியவற்றினை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ.க.சொ.க.கண்ணன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் ஆனந்தன், பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்) செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், நகர்மன்ற தலைவர் சுமதி சிவக்குமார், நகர்மன்றத் துணைத் தலைவர் வெ.கொ.கருணாநிதி, நகராட்சி ஆணையர் சுபாஷினி, நகர்மன்ற உறுப்பினர் சுந்தராபாய், நெடுஞ்சாலைத்துறை(கிராம கிராம சாலைகள்) உதவி கோட்டப்பொறியாளர் சரவணன், உதவிப் பொறியாளர் பிரியதர்ஷினி, ஜெயங்கொண்டம் (தெ) ஒன்றிய செயலாளர் இரா.மணிமாறன், ஒப்பந்ததாரர் கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் மு.சரஸ்வதி, துணை தலைவர் சதீஷ்குமார், தலைமை வரைவாளர் சுந்தரம், துணை வட்டாட்சியர் பழனிவேல் , தலைமை வரைவாளர் சுந்தரம், வருவாய் ஆய்வாளர் ரமேஷ், ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் இரா.மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 April 2022 9:40 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  2. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  3. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  4. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  5. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்