/* */

அரியலூர் காவல் அலுவலகத்தில் மாதந்தோறும் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

அரியலூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் மாதந்தோறும் பல்வேறு சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

அரியலூர் காவல் அலுவலகத்தில் மாதந்தோறும் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
X

இது தொடர்பாக, அரியலூர் மாவட்ட காவல்துறை விடுத்துள்ள செய்திகுறிப்பில், திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி, அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா. பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் மாதந்தோறும் பல்வேறு சிறப்பு குறைதீர்க்கும் முகாம் பின்வரும் நாட்களில் நடைபெற்று வருகின்றன.

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பல்வேறு சிறப்பு குறை தீர்க்கும் முகாம்கள் பின்வரும் நாட்களில் நடைபெற உள்ளது. அவை முறையே: மாதத்தின் முதல் வார வெள்ளிக்கிழமை(06.05.2022) - காவல்துறையினர் குடும்பங்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறையினர்க்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள்.

இரண்டாவது வாரத்தின் செவ்வாய்க்கிழமை (10.05.2022 ) - மூத்த குடிமக்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள். மூன்றாவது வாரத்தின் வெள்ளிக்கிழமை (20.05.2022 ) - மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள். (தரை தளத்தில்) இத்தகைய சிறப்பு குறைதீர்க்கும் நாட்களில் கலந்துகொண்டு பயனடையுமாறு அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Updated On: 28 April 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!