/* */

தமிழர்நீதிக்கட்சிதலைவர் சுபாஇளவரசன் மீது குண்டு வீசிய 6 பேர்மீது குண்டர்சட்டம்

தமிழர் நீதிக் கட்சி தலைவர் சுபா இளவரசன் மீது குண்டு வீசிய 6பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

தமிழர்நீதிக்கட்சிதலைவர் சுபாஇளவரசன் மீது குண்டு வீசிய 6 பேர்மீது குண்டர்சட்டம்
X

தமிழர் நீதிக் கட்சி தலைவர் சுபா இளவரசன் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி உடையார்பாளையம் பகுதியில் பல்வேறு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது காரில் வந்துள்ளார்.

உடையார் பாளையத்தில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி காரில் சென்றபோது துளாரங்குறிச்சி அருகே கடந்த பிப் 11ம்தேதி இரவு சுமார் 7 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலை பிரிவு ரோடு அருகே தனது கார் மீது சுமார் 15 பேர் காரின் இடது புறம் துப்பாக்கியால் சுட்டும் காரின் மீது வெடிகுண்டுகளை வீசியும் தங்களைக் கொல்ல முயற்சித்ததாகவும் தங்கள் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை உடையார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து அரியலூர் எஸ்பி பெரோஸ்கான்அப்துல்லா உத்தரவின்பேரில் உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் ரவி சக்கரவர்த்தி தீவிர விசாரணை செய்து 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தார்.

சிறையிலடைக்கப்பட்ட குவாகம் ராமசாமி மகன் இளந்தமிழன்(28), கழுமங்கலம் கீழத்தெரு ராமாமிர்தம் மகன் ராஜூ(எ) உருளை ராஜூ (43), காட்டுமன்னார்குடி வட்டம் சித்தமல்லி கிராமத்தை சேர்ந்த பஞ்சநாதன் மகன் கலை (எ) ரவிச்சந்திரன் (52), குவாகம் வெற்றி தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் கருப்பையன் (40) சேத்தியாத்தோப்பு இளங்காடு கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி மகன் வீரபாண்டியன் என்கிற சிவகுமார் (40) அரியலூர் கோப்பிலியன் குடிக்காடு தெற்கு தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் சங்கர் (46) ஆகிய 6 பேரையும் உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் ரவி சக்கரவர்த்தி மற்றும் அரியலூர் எஸ்பி பெரோஸ்கான்அப்துல்லா ஆகியோரின் பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்புதச்சட்டத்தில் சிறையிடைக்க மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி உத்தரவிட்டார்.

Updated On: 22 April 2022 11:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  5. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  6. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  7. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!