/* */

வாக்களிக்க பெற்றோருக்கு தூது கல்வித்துறை புதுமை

அனைவரும் வாக்களிக்கவேண்டும் என்பதை மாணவர்கள் மூலம் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

HIGHLIGHTS

வாக்களிக்க பெற்றோருக்கு தூது     கல்வித்துறை புதுமை
X

கட்டாயம் அனைவரும் ஓட்டு போட வேண்டும் என்பதற்காக மாணவர்கள் மூலமாக பெற்றோர்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

தேர்தலில் அனைவரும் வாக்களிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. அந்தவகையில் பள்ளி மாணவர்கள் மூலம் அவர்களது பெற்றோர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி வளாகத்தில் பலநிகழ்ச்சிகளை கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு அங்கமாக அரியலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழப்பழூரில் உள்ள ஒரு தனியார் சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 100 சதவீதம் வாக்களிப்போம், தேர்தல் நாள் ஆகிய வடிவங்களில் அமர்ந்து விழிப்புணர்வு மேற்கொண்டனர்.

அரியலூர் கலெக்டர் ரத்னா, இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலெக்டர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றனர்.மாணவர்களிடையே பேசிய கலெக்டர், 'மாணவ, மாணவிகள் அனைவரும் பெற்றோர்களை வாக்குப்பதிவு அன்று வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், வட்டாட்சியர் ராஜமூர்த்தி (அரியலூர்), மாவட்ட கல்வி அலுவலர் அம்பிகாபதி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, பிரபாகரன் சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் தனவேல், பள்ளித்துணை ஆய்வாளர் பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 March 2021 3:52 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்