/* */

அரியலூரில் ஒரு வாரத்தில் 12,365 மெ.டன் நெல் சேமிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைப்பு

அரியலூர் மாவட்டத்தில் ஒரு வாரத்தில் 12,365 மெ.டன் அளவுள்ள நெல் மூட்டைகள் பல்வேறு மாவட்ட நெல் சேமிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

அரியலூரில் ஒரு வாரத்தில் 12,365 மெ.டன் நெல் சேமிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைப்பு
X

அரியலூர் மாவட்ட நெல் சேமிப்பு கிடங்கில் கலெக்டர் ரமணசரஸ்வதி ஆய்வு மேற் கொண்டார்.

அரியலூர் மாவட்டம், அரியலூர் இரயில் நிலையம், சாத்தமங்கலம் ஆகிய பகுதிகளில் நெல் சேமிப்பு நிலையங்களையும், பார்பனச்சேரி, தேளுர் ஆகிய பகுதிகளில் புதிய நெல் சேமிப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணியினையும் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

அரியலூர் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகள், இரயில் மூலம் விருதுநகருக்கு அனுப்பும் பணிகளையும், சாத்தமங்கலம் தனியார் சர்க்கரை ஆலை வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை, பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் பணிகளை விரைந்து முடிக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

மேலும் புதிதாக அரியலூர் மாவட்டத்தில் 20,000 மெ.டன் சேமிப்பு நிலையம் அமைப்பதற்காக தேளுர் மற்றும் பார்பனச்சேரி உள்ளிட்ட இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டார்கள்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்ததாவது,

தமிழக முதலமைச்சர் விவசாயிகள் வாழ்வு மேம்படும் வகையில் பல வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

அதன் அடிப்படையில் விவசாய தொழில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையிலும், விலைப்பொருட்களை சேமிப்பதற்காக அடிப்படை கட்டமைப்புகளை புதியதாக உருவாக்கி வருகின்றார்கள்.

அரியலூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் சராசரியாக 50-70 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்படும். அதன்படி நடப்பு ஆண்டில் 10% கூடுதலாக தற்போது வரை 70 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகள் அரசு நெல் சேமிப்பு நிலையங்களிலும் மற்றும் திறந்த வெளி சேமிப்பு கிடங்குகளிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல்லை மழை காலத்திற்கு முன்பாக நெல் சேமிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில் கடந்த ஒரு வாரத்தில் திருச்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 2,000 மெ.டன்னில் 1,658 மெ.டன் நெல்லும், சிவகங்கைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 2,000 மெ.டன்னில் 124 மெ.டன் நெல்லும், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தலா 2000 மெ.டன்னில் அனைத்து நெல்லும், விருதுநகருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 1000 மெ.டன்னில் முழுவதும்,

பெரம்பலூர் மார்க்கெட் கமிட்டிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 1,600 மெ.டன்னில் 787 மெ.டன் நெல்லும், கோத்தாரி சர்க்கரை ஆலையில் பாதுகாப்பாக வைப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 4,000 மெ.டன்னில் 1,343 மெ.டன் நெல்லும், அயன் சுத்தமல்லி நெல் சேமிப்பு நிலையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 1,228 மெ.டன் நெல் முழுவதுமாகவும், நெல் அறவை முகவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 2,000மெ.டன்னில் 1,703 மெ.டன் நெல்லும், கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 1,000 மெ.டன் நெல்லில் 522 மெ.டன் நெல்லும் என மொத்தம் 18,828 மெ.டன் நெல்லில் 12,365 மெ.டன் நெல் கடந்த ஒரு வார காலத்தில் பாதுகாப்பாக பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மீதமுள்ள நெல் மூட்டைகளும் ஒரு சில நாட்களில் நெல் சேமிப்பு நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, கோட்டாட்சியர் ஏழுமலை, மண்டல மேலாளர் குணசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


Updated On: 18 July 2021 7:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  2. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  5. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  6. லைஃப்ஸ்டைல்
    கஸ்தூரி மஞ்சளின் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    கொடூர வலி தரும் சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி?
  8. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  9. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  10. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...