/* */

ஆன்லைனில் பணம் கட்டியவருக்கு கார் தரவில்லை: சைபர்கிரைம் வழக்கு பதிவு

ஆன்லைனில் கார் வாங்குவதற்கு பணம் கட்டியவருக்கு கார்தரவில்லை நிறுவனம் மீது சைபர்கிரைம் போலிசார் வழக்குபதிவு

HIGHLIGHTS

ஆன்லைனில் பணம் கட்டியவருக்கு கார் தரவில்லை: சைபர்கிரைம் வழக்கு பதிவு
X

அரியலூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்களை கண்டறியும் வகையில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சைபர் கிரைம் காவல் நிலையத்தை குத்துவிளக்கேற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V. பாஸ்கரன் திறந்து வைத்தார். பின்னர் கணணி வழியில் பதியப்பட்ட முதல் வழக்கின் எப்ஜஆர் நகலை புகார் அளித்தவருக்கு மாவட்ட எஸ்பி பாஸ்கரன் பாராட்டு வழங்கினார்.

இந்த சைபர் கிரைம் அலுவலகம் திறக்கப்பட்டதன் நோக்கம் குறித்து விளக்கம் அளித்த மாவட்ட எஸ்பி பாஸ்கரன், பொதுமக்களுக்கு கணினி மற்றும் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவதால் அதன் மூலம் பல சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க அரசு சைபர் கிரைம் காவல் நிலையத்தை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அமைத்துள்ளது. இதனடிப்படையில் அரியலூர் மாவட்டத்தில் இன்று திறக்கப்பட்டுள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் Bank fraud, Online cheating,Online Game Cheating,Online threatening, ஆன்லைன் பண மோசடி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்கள், இணையவழி பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற ஆன்லைன் குற்றங்களை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என கூறினார். மேலும் சமூக வலைதளங்களில் அவதூறு செய்தி வெளியிடுவோர் மீது சைபர் கிரைம் காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

மேலும் ஆன்லையனில் கார் வாங்குவதற்கு பணம் கட்டியவருக்கு கார் தரவில்லை என்று புகார் அளித்தவருக்கு உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துப்பட்டு, பாதிக்கப்பட்ட நபருக்கு முதல் குற்றப்பதிவு நகல் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சைபர் கிரைம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமேனி, சேகர் முன்னிலை வகித்தார்கள். சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன், தனி பிரிவு காவல் ஆய்வாளர் செல்வகுமாரி மற்றும் காவலர்கள் உடன் இருந்தார்கள்.

Updated On: 30 April 2021 7:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...