/* */

நஞ்சைதரிசில் பருத்தி சாகுபடிசெய்ய விவசாயிகளுக்கு கலெக்டர் ஆலோசனை

சம்பா நெல் சாகுபடி பின்னர் நஞ்சை தரிசில் பருத்தி சாகுபடி செய்வதன் மூலம் கூடுதல் வருமானம் பெறலாம் -கலெக்டர் ஆலோசனை

HIGHLIGHTS

நஞ்சைதரிசில் பருத்தி சாகுபடிசெய்ய விவசாயிகளுக்கு கலெக்டர் ஆலோசனை
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி 50,000 ஏக்கரில் செய்யப்பட்டுள்ளது. இவற்றில், டெல்டாவில் 30,000 ஏக்கரும், இதர பகுதிகளில் 20,000 ஏக்கரும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பா நெல் சாகுபடி பின்னர் இந்த நஞ்சை தரிசில் பருத்தி சாகுபடி செய்வதன் மூலம் கூடுதல் வருமானம் பெறலாம்.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையில் இயல்புக்கு கூடுதலாக மழை பெறப்பட்டு, நீர் நிலைகளில் நீர் தேங்கியுள்ளது. மேலும், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இந்நிலையில், விவசாயிகள் நஞ்சை தரிசில் பருத்தி சாகுபடி செய்வதன் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்க பெறலாம். தற்போது நீண்ட இழை பருத்தி ஒரு குவிண்டால் சந்தை விலை ரூ.10050-க்கும், மத்திய இழை பருத்தி ரூ.9000-க்கும் உள்ளது. இதன் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. பருத்தி பயிரினை பயிரிட்டு 120 முதல் 130 நாட்களில் நல்லவருமானம் வருமானம் பெறலாம்.

பருத்தி பயிரின் ஆணி வேர் மற்றும் சல்லி வேர்கள் ஆழமாக 45-60 செ.மீ வரை சென்று மண்ணில் உள்ள நீரை விரைவாக உறிஞ்சி வளர்கிறது. மேலும், சம்பா பருவத்தில் பயிரிடப்பட்ட நெல் பயிருக்கு பயன்படுத்தியது போக மீதமுள்ள சத்துக்கள் மண்ணில் உபயோகிக்கப்படாமல் உள்ளது. இதனை பருத்தி பயிர் முழுமையாக உறிஞ்சி பயன்படுத்தி நன்கு வளரும். 900 கிராம் வீரிய ஒட்டு ரக பருத்தி விதைக்கு (2 பாக்கெட்) சூடோமோனாஸ் 20 கிராம் என்ற அளவில் கலந்து விதைக்க வேண்டும. விதைக்கும் முன்னர் 25 கிலோ மக்கிய தொழு உரத்துடன் 2 கிலோ சூடோமோனாஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடி, அசோஸ்பைரில்லம் 4 பொட்டலம்;, பாஸ்போபாக்டீரியா 4 பொட்டலம் கலந்து 2-3 நாட்கள் ஈரப்பதத்துடன் வைத்து, பின்னர் சீராக தூவ வேண்டும்.

அடி உரமாக ஏக்கருக்கு யூரியா 2 மூட்டை, டிஏபி 1 மூட்டை அல்லது 20:20:0:13 1 மூட்டை இட வேண்டும். விதைத்த பிறகு பருத்தி நுண்ணூட்டம் 5 கிலோ மணலுடன் கலந்து இட வேண்டும். சாறு உறிஞ்சும் பூச்சிகள் தென்பட்டால் இமிடாகுளோர்பிட் 0.5 மில்லி / லிட்டர் அல்லது அசிட்டாம்பிரைடு 1 மில்லி / லிட்டர்; தெளிக்க வேண்டும். இலைப்புள்ளி நோய் தென்பட்டால் மாங்கோசெப்; ூ கார்பன்டசிம் 2 கிராம் 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். 20 மற்றும் 40-ஆம் நாட்களில் களை எடுத்து ஏக்கருக்கு யூரியா 45 கிலோ மற்றும் பொட்டாஷ் 25 கிலோ இரண்டு முறை இட வேண்டும்.

75-85 நாட்களில் 13-15 பக்க கிளைகள் உள்ள தருணத்தில் நுனி கிள்ளுவதன் மூலம் பக்கக் கிளைகள் அதிகமாக தோன்றி, அதிக காய்கள் பிடிக்கும். இத்தருணத்தில், பிலனோபிக்ஸ் 1 மில்லி / லிட்டர் என்ற அளவில் 60 மற்றும் 80ஆம் நாட்களில் தெளிப்பதன் மூலம் பூ-பிஞ்சு உதிர்வதை தடுக்கலாம். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் காட்டன் ப்ளஸ் என்ற பயிர் ஊக்கி ஏக்கருக்கு 2 கிலோ 200 லிட்டர் தண்ணீரில் கலந்து 45 மற்றும் 80 நாட்களில் இருமுறை தெளிக்க வேண்டும். இதனால் பூ,பிஞ்சு அதிகம் பிடித்து 10 சதவீதம் வரை கூடுதல் மகசூல் பெறலாம். இதனை சோழமாதேவி கிரீடு வேளாண்மை அறிவியல் மையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

இனக்கவர்ச்சி பொறி ஏக்கருக்கு 5 எண்கள் வைப்பதன் மூலம் ஸ்போடாடிப்ரா காய் புழுக்களின் அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். 100-110 நாட்களில் முதல், காய் வெடித்ததும் முதல் அறுவடை ஆரம்பிக்கலாம். மூன்று முதல் ஐந்து தடவை வரை வெடித்த பருத்தியினை பறித்து, வெயிலில் உலர்த்தி, பதப்படுத்தி விற்பனை செய்ய வேண்டும். முறையான விதை தேர்வு, நீர், உர நிர்வாகம் செய்தல், பூச்சி மற்றும் களை மேலாண்மை செய்வதன் மூலம் ஏக்கருக்கு 10 முதல் 12 குவிண்டால் வரை கூடுதல் மகசூல் பெறுவதுடன், அதிக லாபம் பெறலாம். இவ்வாறு மேற்கண்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, நஞ்சை தரிசில் பருத்தி சாகுபடி செய்ய மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 9 April 2022 4:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்