/* */

அழகியமணவாளன் ஊராட்சியில் பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கிய அரியலூர் எம்எல்ஏ

கலைஞரின் அனைத்துக் கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உதவிகளை அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா வழங்கினார்.

HIGHLIGHTS

அழகியமணவாளன் ஊராட்சியில் பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கிய அரியலூர் எம்எல்ஏ
X

கலைஞரின் அனைத்துக் கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா வழங்கினார்.


தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் தாக்கல் செய்த முதல் வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் 5 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியை ஒருவாக்கிட அனைத்துத் துறைகளின் ஒருங்கிணைப்புடன் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் என்ற மாபெரும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்கள்.

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்துக் கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தை துவக்கி வைத்தார்கள்.

அதனைத்தொடர்ந்து, செந்துறை ஊராட்சி ஒன்றியம், அசாவீரன்குடிகாடு கிராமத்தில் கலைஞரின் அனைத்துக் கிராம வேளாண் வளர்ச்சித் திட்டம் துவக்க விழா நிகழ்வில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறையின் சார்பில் தென்னக்கன்றுகள், உளுந்து, பேட்டரி விசைத்தெளிப்பான்கள், பண்ணை உபகரணங்கள், ஊடுபயிராக பயிரிடும் வகையில் பழச்செடிகள் மற்றும் மரக்கன்றுகள், மாடி காய்கறித்தோட்டம் அமைக்கும் வகையில்ழ 8 வகையான காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு, அங்கக இடுபொருட்கள், விவசாயிகளுக்கான கிசான் அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை திருமானூர் ஒன்றியம் அழகியமணவாளன் ஊராட்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா கலந்துகொண்டு விவசாய பயனாளிகளுக்கு வழங்கினார்

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களும் ஒட்டுமொத்த வளர்ச்சி அடைந்து தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். இந்த நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் அட்மா தலைவர் கென்னடி, வேளாண்மை உதவி இயக்குநர் லதா, வேளாண்மை அலுவலர் சேகர், தோட்டக்கலை அலுவலர் சந்தியா, வேளாண் உதவி செயற்பொறியாளர் நெடுமாறன் பஞ்சாயத்து தலைவர் சுதாபாலு, ஒன்றிய கவுன்சிலர் முருகானந்தம் மற்றும் கழக முன்னோடிகள், கிராம பொதுமக்கள், விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 24 May 2022 11:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!