/* */

அரியலூரில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம், அமைச்சர் பங்கேற்பு

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா, தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார்.

HIGHLIGHTS

அரியலூரில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம், அமைச்சர் பங்கேற்பு
X

அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கினார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்தார். மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள், சிறப்பு முகாம்கள், தடுப்பூசிகள் கையிருப்பு, மருத்துவ உபகரணங்கள்தேவை, ஆக்சிஜன் உற்பத்தி ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், அரியலூர் மாவட்டத்தில் கூடுதலாக 500படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். போதுமான அளிவிற்கு ஆக்சிஜன் கையிருப்பு உள்ளதாகவும், தனியார் சிமெண்ட் ஆலைகள் மூலம் ஆக்சிஜன் உற்பத்திக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவாதக தெரிவித்தார்.

மேலும் புதியதாக நோய் தொற்று ஏற்படுபவர்களை கண்காணிக்க வருவாய்த்துறை, அங்கன்வாடி ஊழியர்கள், காவலர்கள் என 1500பேர் வீடுவீடாக சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், அதில் ஜுரம், நோய் தொற்று உள்ளவர்கள் உடனடியாக மருத்வமனைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். புதியதாக பரவாமல் தடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ள சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, அம்முகாமில் ஊசிபோடுபவர்களை உற்சாகப்படுத்த பரிசுகள் வழங்கி வருவதாக அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

தமிழகத்தில் ஆட்சி பொருப்பேற்று 20நாட்களே ஆனநிலையில் பெருந்தொற்றாக கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிரம் காட்டி வருவதாகவும், விரைவில் அவர் அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவார் என்றும், அதன்மூலம் வளர்ச்சிப்பணிகள் துரிதப்படுத்தப்படும் என்று கூறினார்.

இதனையடுத்து அரியலூர் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை நேரில் பார்வையிட்டும், மருத்துவகல்லூரி கட்டுமானப்பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார். அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன், மாவட்ட எஸ்பி பாஸ்கரன், மாவட்ட ஊராட்சித்தலைவர் சந்திரசேகர் மற்றும் அரசு பல்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 29 May 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஈரோடு
    கடம்பூர் வனத்தில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்ற பெண் யானை...
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டிய கோடை மழை: ஒரே நாளில் 94.3 மி.மீ பதிவு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  10. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...