/* */

அரியலூர்: 42 கிராமங்களில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தொடக்கம்

திட்டத்தின் நோக்கம் தரிசு நில தொகுப்புகளில் நுண்ணீர் பாசனம் அமைத்து, சாகுபடிக்கு உகந்த நிலமாக கொண்டு வருவதாகும்.

HIGHLIGHTS

அரியலூர்: 42 கிராமங்களில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தொடக்கம்
X

அரியலூர் மாவட்டத்தில் 2022-23-ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், ஊரக வளர்ச்சித் துறையின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 42 கிராமங்களில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

அரியலூர் ஒன்றியத்தில், ஒட்டக்கோவில், கருப்பிலாக்கட்டளை, சென்னிவனம், வெங்கட கிருஷ்ணாபுரம், கல்லங்குறிச்சி, அஸ்தினாபுரம், சிறுவலூர், கோமான் ஆகிய கிராமங்களிலும்,

செந்துறை ஒன்றியத்தில், கழுமங்கலம், நமங்குணம், செந்துறை, பிலாக்குறிச்சி, நல்லம்பாளையம், குமிழியம், வீரக்கண் ஆகிய கிராமங்களிலும்,

திருமானூர் ஒன்றியத்தில், வெற்றியூர், வாரணவாசி, திருமழப்பாடி, வெங்கனூர், மலத்தான்குளம், செம்பியக்குடி, விழுப்பணங்குறிச்சி ஆகிய கிராமங்களிலும்,

ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில், உட்கோட்டை, இளைய பெருமாள் நல்லூர், தேவாமங்கலம், வெத்தியார்வெட்டு, கழுவந்தோண்டி, பெரிய வளையம் ஆகிய கிராமங்களிலும்,

ஆண்டிமடம் ஒன்றியத்தில், அணிக்குதிச்சான், அய்யூர், கொளத்தூர், பெரியாத்துக்குறிச்சி, விழுதுடையான், பெரிய கருக்கை ஆகிய கிராமங்களிலும்,

தா.பழூர் ஒன்றியத்தில், உதயநத்தம், ஸ்ரீபுரந்தான், குணமங்கலம், காசாங்கோட்டை, நடுவலூர், அணைக்குடம், கோடங்குடி, மணகெதி ஆகிய கிராமங்களிலும், செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின்படி, 15 ஏக்கர் வரையிலான தொடர்ச்சியாக உள்ள தரிசு நில தொகுப்புகளை கண்டறிந்து, அங்கு ஆழ்துளை அல்லது குழாய் கிணறு அமைத்து, நுண்ணீர் பாசனம் அமைத்து, சாகுபடிக்கு உகந்த நிலமாக கொண்டு வருவதாகும்.

வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை வேளாண்மை பொறியியல் துறை மற்றும் வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை மூலம் செயல்படுத்தக்கூடிய அனைத்து திட்டங்களில் 80 சதவீத திட்டங்கள் மேற்காணும் கிராமங்களில் செயல்படுத்தப்படும். மேலும், இத்திட்டத்தின் மூலம், விவசாயிகள் சம்மந்தப்பட்ட தடுப்பணை, உலர் கலம், கதிர் அடிக்கும் நிலம், பண்ணைக் குட்டை, கசிவு நீர் குட்டை மற்றும் வயலுக்கு செல்லும் கிராம சாலை போன்ற முக்கியமான பணிகளை ஊரக வளர்ச்சி துறையுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.

கூட்டுறவு துறை மூலம் பயிர்க்கடன் வழங்குதல், கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் கால்நடைகள் தொடர்பான திட்டங்களும், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் மூலம் உரிய திட்டங்களும் செயல்படுத்தப்படும்.

குறிப்பாக மேற்காணும் கிராமங்களில், தொடர்ச்சியாக 15 ஏக்கர் வரையிலான தரிசு நிலங்கள் இருப்பின், உரிய விவசாயிகள் உழவன் செயலியில் உடன் பதிவு செய்தால், பதிவேற்றம் செய்த விவரங்களை துறை அலுவலர்கள் தரிசு நிலத் தொகுப்புகளை உடன் நேரில் பார்வையிட்டு சரிபார்த்த பின்பு நிலத்தடி நீர் ஆய்வு மேற்கொண்டு, ஆழ்துளை கிணறு அல்லது குழாய் கிணறு அமைத்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, தரிசு நிலமுடைய விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்யவேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 20 Aug 2022 12:26 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  2. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  3. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  6. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி
  7. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்