/* */

Aries in tamil-நீங்க மேஷ இராசிக் காரரா..? உங்க குணம் எப்படி இருக்கும்? தெரிஞ்சுக்கங்க..!

மேஷ இராசியில் பிறந்தவர்களுடைய தனித்துவமான குணங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம் வாங்க.

HIGHLIGHTS

Aries in tamil-நீங்க மேஷ இராசிக் காரரா..? உங்க குணம் எப்படி இருக்கும்? தெரிஞ்சுக்கங்க..!
X

aries in tamil-மேஷ இராசிக்காரரின் குணங்கள்.(கோப்பு படம்)

Aries in tamil

மேஷ இராசியின் அதிபதி செவ்வாய் ஆகையால் அதிகம் கோபம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அடுத்தவர்களுடைய குறைகளை சுட்டிக்காட்டுவதில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். பெரும்பாலான இந்த இராசிக் காரர்களுக்கு கால்கள் மற்றும் மூட்டு சார்ந்த பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

ஒருவரை பார்த்த உடனேயே அவர்களது இயல்பையும் அவர்களுடைய உண்மை முகம் என்ன என்பதையும் கண்டுபிடித்துவிடும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.


உணர்ச்சி வசப்படுபவர்கள்

இவர்கள் அதிகமாக உணர்ச்சி வசப்படுபவர்களாகவும் இருப்பார்கள். உடனுக்குடன் உணர்ச்சிக்கு கட்டுப்படுவார்கள். மிகவிரைவாக தமது உணர்ச்சிகளில் இருந்து வெளிவரக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். கோபம் காட்டும் அதே அளவில் அன்பையும் காட்டக்கூடியவர்கள்.

இவர்கள் அதிகம் செலவு செய்வதில் விருப்பம் உடையவர்கள். அதனால் பணம் கையில் இருந்தால் அதை எப்படி செலவு செய்யலாம் என்று விரைவாக திட்டமிடுவதிலும் கில்லாடிகளாக இருப்பார்கள்.

செலவு செய்வதில் வல்லவர்கள் என்தால் இவர்களுக்கு பணத்தை சேமிக்கும் எண்ணம் சிறிதளவும் இருக்காது. இருப்பினும் அவர்கள் செய்த அந்த செலவுகள் பயனற்ற ஊதாரி செலவுகளாக இருக்காது. அவசிய தேவைகளுக்காக செய்யப்படும் செலவுகளாகவே இருக்கும்.

Aries in tamil

புண்ணியகாரியங்கள் செய்வார்கள்

மேஷ இராசிக்காரர்கள் புண்ணிய காரியங்கள் செய்வதிலும் ஆன்மிக காரியங்கள் செய்வதிலும் ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். பொதுவாகவே எந்த செயலாக இருந்தாலும் விடாமுயற்சியுடன் செய்துமுடிக்கும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. இவர்களுடைய திறமை கண்டு எதிரிகள் கூட அச்சம் கொள்வார்கள்.

பொதுவாக இவர்களுக்கு நீர் நிலைகளை பார்த்தால் அச்சம் ஏற்படும். ஆனால் உயரங்களைப் பார்த்து பயம் கொள்ள மாட்டார்கள்.


முதலிடம் எனக்குத்தான்

எல்லா விஷயத்திலும் முதன்மை பெற்றவர்களாக விளங்கும் எண்ணம் இவர்களுக்கு எப்போதும் இருக்கும். தனக்குத்தான் முதலிடம் கிடைக்கவேண்டும் என்ற எண்ணம் கொணடவர்களாக இருப்பார்கள். தமக்கு முன்னே நடக்கும் அநீதியை கண்டு கோபம் கொள்வார்கள். அநீதியை தட்டிக் கேட்பார்கள்.

மேலும் எந்த செயலை செய்தாலும், ஏனோதானோ என்று செய்வதில் விருப்பம் கொள்ளமாட்டார்கள். எந்த செயலாக இருந்தாலும் அதில் துடிப்பும் ஆர்வமும் உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டால் அதன் பின்விளைவுகளை பற்றி வருந்தமாட்டார்கள். யாருக்காகவும் தமது முடிவை மாற்றிக் கொள்ளவும் மாட்டார்கள்.

செயல் வீரர்

இவர்களுடைய பேச்சில் கம்பீரம் இருக்கும். அதனால் அனைவரையும் கட்டுக்குள் கொண்டு வருகின்ற இயல்பு இவர்களுக்கு அதிகம் இருக்கும். மிக வேகமாக செயல்படக் கூடிய இவர்கள் எதற்கும் அஞ்சாமல் தைரியமாக தமது செயல்களை செய்வார்கள்.

ஒரு விஷயத்தை சொல்வதைக் காட்டிலும் அதனை செய்து காட்டுவதையே விரும்புவார்கள். தலைமை தாங்கும் இயல்பு அதிகம் இருப்பதனால், தொழில்சார் வாழ்வில் வெற்றி பெற்றாலும் தனிப்பட்ட வாழ்வில் பிரச்னைகளை எதிர் கொள்ள நேரிடும்.

Aries in tamil

நிம்மதியற்ற வாழ்க்கை

மேலும் வாழ்க்கையில் ஒரு போராட்டமான மனதுடனேயே வாழ்க்கையை வாழ்வார்கள். தனிப்பட்ட வாழ்வில் இந்த இராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடப்பது அரிதான காரியமாகவே இருக்கும்.

இவர்களால் பிறருக்கு கிடைக்கும் நன்மைகளைப் போல இவர்களுக்கு பிறரால் நன்மை கிடைப்பதில்லை. இவர்களுடன் தனுசு, துலாம், சிம்மம் போன்று இராசிகள் நட்பாக இருக்கும்.

குடும்பத்துக்காக கடுமையாக உழைக்கும் அவர்களால் குடும்பத்தினரிடம் இருந்து நற்பெயரை பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கும். அதிகம் நோய்களால் பாதிக்கப்படுவதால் மருத்துவச் செலவுகள் அதிகமாகவும் இருக்கும். இதனால் அதிகம் விரக்தி அடைந்தவர்களாக காணப்படுவார்கள்.

Updated On: 3 Sep 2023 9:03 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன்...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்..!
  3. ஈரோடு
    நம்பியூர் பகுதியில் வெளுத்துவங்கிய மழையால் உடைந்த குளம்..!
  4. ஈரோடு
    அந்தியூர் பெரிய ஏரியில் சிக்கிய 17 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா
  5. ஈரோடு
    சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கிய...
  6. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  7. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  8. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  9. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!