/* */

குஜராத் சட்டசபை 2 ஆம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு துவக்கம்

குஜராத் சட்டப்பேரவைக்கு 2-வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு 93- தொகுதிகளில் தொடங்கியுள்ளது.

HIGHLIGHTS

குஜராத் சட்டசபை 2 ஆம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு துவக்கம்
X

நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள குஜராத் மாநில தேர்தல் திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அங்குள்ள 182 சட்டசபை தொகுதிகளில் முதற்கட்டமாக 89 இடங்களுக்கு கடந்த 1-ந்தேதி தேர்தல் நடந்து முடிந்தது. 2-வது மற்றும் இறுதிக்கட்டமாக மீதமுள்ள 93 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது.

2-வது மற்றும் இறுதிக்கட்டமாக மீதமுள்ள 93 தொகுதிகளுக்கான தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. மாநிலத்தின் முக்கியமான ஆமதாபாத், வதோதரா, காந்திநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த இந்த தொகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது.

பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் இன்று காலை அகமதாபாத்தில் உள்ள ராணிப்பில் உள்ள நிஷான் பள்ளியில் வாக்களிக்கிறார். இந்நிலையில், பிரதமர் மோடி தன்னுடைய டுவிட்டரில் கூறியதாவது, குஜராத் தேர்தலின் 2-வது கட்டத்தில் வாக்களிக்கும் அனைவரையும், குறிப்பாக இளம் வாக்காளர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் அகமதாபாத்தில் காலை 9 மணிக்கு வாக்களிப்பேன். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இடைத்தேர்தல்களும் நடைபெற்று வருகின்றன. இந்த இடைத்தேர்தலில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அகமதாபாத்தின் நாரன்புராவில் உள்ள அங்கூரில் இன்று காலை வாக்களிக்கிறார். குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேலும் ஆமதாபாத்தில் உள்ள ஷிலாஜ் தொடக்கப்பள்ளியில் இன்று காலை வாக்களிக்கிறார். உத்தரபிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல், குஜராத் காங்கிரஸ் தலைவர் ஜகதீஷ் தாக்கூர் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இர்பான் பதான், ஹர்திக் பாண்டியா, கருணால் பாண்டியா ஆகிய பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் தங்களது சொந்த மாநிலமான குஜராத்தில் இன்று வாக்களிக்கின்றனர்.

Updated On: 6 Dec 2022 4:42 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் ஊழல் நடந்து வருகிறது : வானதி...
  2. அரசியல்
    திமுக எம்எல்ஏக்களுக்கு திடீர் உத்தரவு..!
  3. வீடியோ
    🔴LIVE : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் பாரத பிரதமர் மோடி தரிசனம்...
  4. கல்வி
    மத்திய பல்கலைக்கழகங்கள் பற்றி தெரியுமா மாணவர்களே..?
  5. கலசப்பாக்கம்
    அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  6. சுற்றுலா
    ஊட்டி போக போறீங்களா...? இதை படிச்சிட்டு மகிழ்ச்சியா போயிட்டு
  7. வந்தவாசி
    வந்தவாசி அருகே லாரி கவிழ்ந்து விபத்து..!
  8. வீடியோ
    என் வெற்றிக்கு யார் காரணம் ! விழுப்புரம் மாணவி அசத்தல் பதில் !...
  9. வீடியோ
    பழுக்க கொட்டப்பட்ட அனல் கங்கின் மேல் தீமிதித்த பக்தர்கள்!#devotional...
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் பசுமை பந்தல் அமைப்பு