/* */

நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்

New Corona Vaccine - புனேயில் உள்ள ஜெனோவா பயோபார்மசியூட்டிகல்ஸ் நிறுவனம் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.

HIGHLIGHTS

நாட்டின் முதல் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசிக்கு ஒப்புதல்
X

பைல் படம்.

New Corona Vaccine -கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசியை மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் உள்ள ஜெனோவா பயோபார்மசியூட்டிகல்ஸ் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசிக்கு 'ஜெம்கோவாக்-19' என பெயரிடப்பட்டுள்ளது. 'எம்.ஆர்.என்.ஏ.' என்பது 'மெசேஞ்சர் ஆர்.என்.ஏ.' என்பதன் சுருக்கம் ஆகும். 'மெசேஞ்சர் ஆர்.என்.ஏ.' என்பது செல்கள், புரதங்களை உருவாக்கும் செயல்முறையில் ஈடுபடுகிற ஒற்றை இழை ஆர்.என்.ஏ. வகை ஆகும். 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிகள் பாதுகாப்பானவையாக கருதப்படுகின்றன. குறிப்பாக, இந்த தொழில்நுட்பம், வைரசின் தற்போதுள்ள அல்லது உருவாகும் உரு மாற்ற வைரஸ்களுக்கு ஏற்ற வகையில் தடுப்பூசியை விரைவாக மாற்றுவதற்கான நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.

மேலும் இந்த தொழில்நுட்ப தளம், இந்தியாவை தொற்று நோய்க்கு தயாராக இருக்க உதவும். இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் முடிந்துள்ளன. அவை மத்திய மருந்துகள் தரக்கட்டப்பாட்டு அமைப்பிடம் வழங்கப்பட்டு, மதிப்பிடப்பட்டுள்ளன. இதில் இந்த தடுப்பூசி பாதுகாப்பானது, சகித்துக் கொள்ளக்கூடியது, நோய் எதிர்ப்புத்திறன் கொண்டுள்ளது என்று தெரிய வந்துள்ளதாக ஜெனோவா பயோபார்மசியூடிக்கல்ஸ் நிறுவனம் கூறுகிறது. இதன் அடிப்படையில் இந்த தடுப்பூசிக்கு அவசர பயன்பாட்டு ஒப்புதலை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் வழங்கி உள்ளது. இந்த தகவல்களை ஜெனோவா பயோபார்மசியூடிக்கல்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 30 Jun 2022 9:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’