வரும் 7ம் தேதி முதல் 3 நாட்கள் ரேஷன் கடைகள் ஸ்டிரைக்

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 7ம் தேதி முதல் 3 நாட்கள் ரேஷன் கடைகள் வேலை நிறுத்தம் செய்வது என பணியாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-05-29 11:30 GMT

பைல் படம்.

தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர்கள் சங்க மாவட்ட கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். பொருளாளர் மூர்த்தி, செயலாளர் சரவணன், மாநில செயற்குழு உறுப்பினர் மனோகரன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.

கூட்டத்தில், அகவிலைப்படி, 17 சதவீதத்தை, 31 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். ரேஷன் கடைகளுக்கு தனித்துறை உருவாக்க வேண்டும். புதிய 4ஜி விற்பனை முனைய கருவிகள் வழங்க வேண்டும். விடுமுறை நாட்களில், நகர்வு பணியை நிறுத்த வேண்டும். பொட்டல முறையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஜூன், 7, 8, 9 ஆகிய 3 நாட்கள், ரேசன் கடை பணியாளர்கள் முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், ஜூன் 10ம் தேதி, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் அனைத்து துறை சார்ந்த பணியாளர்களும், கோரிக்கையை மீட்டெடுக்க வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டு, சென்னையில் நடக்கும் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News