ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல் துவக்கம்

பரமத்திவேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில், தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.

Update: 2024-04-28 02:45 GMT

பரமத்திவேலூர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் இலவச தண்ணீர் பந்த் அமைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர், வழங்கப்பட்டது.

பரமத்திவேலூர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் இலவச தண்ணீர் பந்த் அமைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர், வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. பகல் நேரத்தில் 107 டிகிரி அளவிற்கு வெப்பம் உள்ளதால், பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளுக்குள் முடங்குகின்றனர். வெளியில் செல்ல வேண்டிய வேலை இருந்தாலும் காலை 9 மணிக்கு முன்பே செல்கின்றனர். காலை 10 மணிக்குமேல் ரோடுகளில் போக்குவரத்து மிகவும் குறைந்துள்ளது. முக்கிய வேலைக்காக வெயிலில் செல்பவர்கள் தாகத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் தடுமாறுகின்றனர். இதனால் அவர்கள் உடலில் நீர்ச்சத்து குறைந்து உடல்நலம் பாதிக்கப்படுகின்றன.

இதை தடுத்து வெயிலை சமாளிக்க தேவைப்படும் போது பொதுமக்களுக்கு குடிநீர் மற்றும் நீர்மோர் இலவசமாக வழங்கும் வகையில், பரமத்திவேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் அரசு ஆஸ்பத்திரி அருகில், கண்டர் பள்ளி ரோட்டில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பரமத்தி வேலூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் லட்சுமி முரளி மற்றும் செயல் அலுவலர் திருநாவுக்கரசு ஆகியோர் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு குடிநீர் மற்றும் நீர் மோர் வழங்கினார்.

திறப்பு விழாவில் வார்டுகவுன்சிலர்கள் மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கோடை வெய்யிலை சமாளிக்கும் விதமாக மே மாதம் முடியும் வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொது மக்களுக்கு குடிநீர் மற்றும் நீர்மோர் விநியோகம் செய்யப்படும் என செயல் அலுவலர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.

Tags:    

Similar News