ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்

Namakkal news- பரமத்தி வேலூரில் ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்படட்து.

Update: 2024-04-28 10:45 GMT

Namakkal news- பரமத்திவேலூர் வாரச்சந்தையில், ரசாயணம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட, மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.

Namakkal news, Namakkal news today- நாமக்கல், பரமத்திவேலூரில் ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட, 100 கிலோ மாம்பழங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில், பல இடங்களில் ரசாயணம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் வைக்கப்பவுதாக ணவு பாதகாப்பத்தறைக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அருணன் உத்தரவின்பேரில், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் டவுன் பஞ்சாயத்துகு உட்பட்ட, ப.வேலூரில் நடைபெறும், ஞாயிற்றுக்கிழமை வார சந்தையில், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.

அப்போது, ரசாயனம் கலந்து மாம்பழங்களை பழுக்க வைத்து வியாபாரிகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதை கண்டறிந்தனர். ப.வேலூர் உணவு பாதுகாப்பு அதிகாரி முத்துசாமி ஒவ்வொரு கடையாக சோதனை நடத்தி 100 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்து டவுன் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் உள்ள குப்பை தொட்டியில் கொட்டி அழித்தனர். இதுபோன்று மாம்பழங்கள், வாழைப்பழங்கள் ஆகியவற்றை ரசாயன கலவை மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தால் மிகக் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வியாபாரிகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்தார்.

Tags:    

Similar News