சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்

நாமக்கல் மாவட்டத்தில், சங்கரஹர சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

Update: 2024-04-28 04:00 GMT

சங்கரடஹர சதுர்த்தியை முன்னிட்டு, ப.வேலூர் அருகில் உள்ள கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில், சங்கரஹர சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள விநாயகருக்கு பால், தயிர், பன்னீர் ,இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் , தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

நாமக்கல் செங்கழநீர் பிள்ளையார் கோயில், முல்லை நகர் செல்வகணபதி கோயில், டீச்சர்ஸ் காலனி கல்வி வியாகர் கோயில், ஏ.எஸ்.பேட்டை விநாயகர் கோயில், திருச்செங்கோடு ரோடு மாப்பிள்ளை விநாயகர் கோயில், பரமத்திவேலூர் தாலுகா, நன்செய் இடையாரில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோயிலில் உள்ள விநாயகர், பரமத்திவேலூர் நகரில் உள்ள பஞ்சமுக விநாயகர், பேட்டை விநாயகர், பாண்டமங்கலம் விநாயகர், ஆனங்கூர் விநாயகர், அய்யம்பாளையம் விநாயகர், கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள விநாயகர், மோகனூர் பாலசுப்ரமணியசாமி கோவில் உள்ள விநாயகர் மற்றும் நாமக்கல் பகுதியில் உள்ள பல்வேறு விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News