வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்

பகலில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2024-04-26 10:39 GMT

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா. 

கடும் வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட  ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன் அறிவிப்பில், நாமக்கல் உள்ளிட்ட வட உள் மாவட்டங்களில் வெப்ப நிலை மேலும் அதிகரித்து, ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என தெரிவித்துள்ளது.

எனவே, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், வெப்பத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள, போதுமான அளவு தண்ணீர் அருந்தவேண்டும். அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை முழுமையாக தவிர்க்க வேண்டும். வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதர நிலையத்தை அனுக வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News