ப.வேலூர் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து தொழிலாளி தற்கொலை

Frustrated laborer commits suicide due to dispute with wife near Vellore

Update: 2024-05-07 02:07 GMT

ப.வேலூர் அருகே மது அருந்தியதால் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், மனமுடைந்த தொழிலாளி தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் (வயது57), பெயிண்டிங் தொழிலாளி. இவரது மனைவி வாசுகி (54). இவர்களுக்கு முரளிதரன் என்ற மகனும், கவுசல்யா என்ற மகளும் உள்ளனர். செல்வம் பெயிண்ட் அடிக்க சென்றுவிட்டு வீட்டிற்கு வரும்போது தினசரி மது அருந்திவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவரது மனைவி வாசுகி பலமுறை அவருக்கு அறிவுரை கூறியும் குடிப்பழக்கத்தை நிறுத்தவில்லை.

கடந்த ஒரு மாதத்திற்கு முன் அவரை குடி போதை மறுவாழ்வு மையத்திற்கு அழைத்துச் சென்று 23 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் காரணமாக 15 நாட்களாக மது அருந்தாமல் இருந்து வந்துள்ளார். பின்னர் மீண்டும் மது அருந்தி வந்துள்ளார். இதை அவரது மனைவி கண்டித்ததால் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீட்டுக்கு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

அடுத்த நாள், சாலப்பாளையம் அருகே உள்ள வேப்பமரத்துக்கு அடியில் செல்வம் மயங்கிய நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாசுகி தனது கணவர் செல்வம் தற்கொலை செய்துகொள்வதற்காக, தென்னை மரத்திற்கான விஷ மாத்திரையை சாப்பிட்டு மயங்கிய நிலையில் கிடப்பதை தெரிந்துகொண்டார். உடனடியாக அவரை ப.வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் செல்வம் உயிரிழந்தார். இது குறித்து ப.வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News