கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு உமா ஆய்வு செய்தார்.

Update: 2024-05-07 02:18 GMT

கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும், சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் உமா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், இருக்கூர், பெரப்பன்சோலை, கபிலக்குறிச்சி மற்றும் பெரியசோளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் அரசு திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சியர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், இருக்கூர் பஞ்சாயத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 48.46 லட்சம் மதிப்பீட்டில் 3.150 கி.மீ தொலைவிற்கு சாலை மேம்படுத்தப்பட்டுள்ளதையும், இருக்கூர் முதல் பாண்டமங்கலம் வரை ரூ.35.61 லட்சம் மதிப்பீட்டில் 2.140 கி.மீ தொலைவிற்கு சாலை மேம்படுத்தப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, பெரப்பன்சோலை பஞ்சாயத்தில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், ரூ.4.22 லட்சம் மதிப்பீட்டில் 4,200 நிழல் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதையும், ரூ. 2.20 லட்சம் மதிப்பீட்டில் கபிலர்மலை நல்லூர் சாலையில் கருக்கம்பாளையம் பிரிவு சாலை வரை 3,000 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருதையும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், பெரியசோளிபாளையம் பஞ்சாயத்தில் 15-வது நிதிக்குழு மான்யம் திட்டத்தின் கீழ் மண்புழு உரக் கொட்டகை அமைக்கப்பட்டு மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் வருகை தரும் குழந்தைகள் எண்ணிக்கை, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து பெரியசோளிபாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

Similar News