பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு ஆட்சியர் பாராட்டு

Namakkal news- நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 14 அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஆட்சியர் பாராட்டினார்.

Update: 2024-05-08 02:00 GMT

Namakkal news- நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற 14 அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்ளுக்கு ஆட்சியர் உமா சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Namakkal news, Namakkal news today- நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 14 அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஆட்சியர் பாராட்டினார்.

பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 14 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, கலெக்டர் அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து கூறினார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பாச்சல் அரசு மேல்நிலைப்பள்ளி, எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி, காவக்காரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, செங்கரை அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளி, கந்தம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, கரிச்சிபாளையம் மேல்நிலைப்பள்ளி, பல்லக்காபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கபிலர்மலை அரசு மேல்நிலைப்பள்ளி, பல்லக்காபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, மல்லசமுத்திரம் ராமாபுரம் அரசு மாதிரி பள்ளி, சமூக நலத்துறை சார்பில் செயல்பட்டு வரும் எதிர்மேடு நேரு நினைவு சம்பூர்ணியம்மாள் மாற்றுத்திறனாளிகள் அரசு மேல்நிலைப்பள்ளி, பழங்குடியினர் நலத்துறை சார்பில் செயல்பட்டு வரும் செங்கரை அரசு பழங்குடியினர் நல மேல்நிலைப்பள்ளி, முள்ளுக்குறிச்சி அரசு பழங்குடியினர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 14 அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News