பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச பயிற்சி

பாக்கு மரத்தில் கோடை காலத்தில், ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாடு மற்றும் நோய் நிர்வாகம் என்ற தலைப்பில் நாமக்கல்லில் வரும் 9ம் தேதி இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

Update: 2024-05-07 01:45 GMT

பைல் படம்

பாக்கு மரத்தில் கோடை காலத்தில், ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாடு மற்றும் நோய் நிர்வாகம் என்ற தலைப்பில் நாமக்கல்லில் வரும் 9ம் தேதி இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் க.வேல்முருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும், வேளாண் அறிவியல் நிலையத்தில் (கேவிகே) வரும் 9ம் தேதி காலை 10 மணிக்கு, கோடையில் பாக்கு மரத்தில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் கட்டுப்பாடு மற்றும் நோய் நிர்வாகம் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.

பயிற்சியில் பாக்கு மரப் பயிரைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள், கோடைக்கால சூழ்நிலைக்கேற்ப இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள், வளர்ச்சியூக்கிகள் போன்ற தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் விவசாயிகள், இளைஞர்கள், பண்ணை மகளிர் மற்றும் ஆர்வம் உள்ள ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்.

பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் 04286-266345, 266650 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பெயர் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News