நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60 பள்ளிகள் சென்டம்

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

Update: 2024-05-06 11:30 GMT

நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில், 14 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 46 தனியார் பள்ளிகள் என மொத்தம், 60 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.

தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 1ல் துவங்கி 22ல் முடிந்தது. நாமக்கல் மாவட்டத்தில் 197 பள்ளிகளை சேர்ந்த, 8,413 மாணவர்கள், 8,847 மாணவியர் என மொத்தம், 17,260 பேர் தேர்வு எழுதினர்.

அதை தொடர்ந்து, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில், நாமக்கல் மாவட்டத்தில், 14 அரசு பள்ளிகள் உள்பட, மொத்தம் 60 பள்ளிகள், 100க்கு 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

அதன் விபரம்:

பாச்சல், எருமப்பட்டி ஆண்கள், புதுச்சத்திரம், காவக்காரப்பட்டி, செங்கரை ஏகலைவா மாதிரி பள்ளி, கந்தம்பாளையம், கரிச்சிப்பாளையம், பல்லக்காப்பாளையம், கபிலர்மலை, பாப்பம்பாளையம், மல்லசமுத்திரம் ராமாபுரம் மாதிரி பள்ளி, எதிர்மேடு நேரு நினைவு சம்பூரணம்மாள் மாற்றுத்திறனாளிகள் பள்ளி, செங்கரை ஜி.டி.ஆர். பள்ளி, முள்ளுக்குறிச்சி ஜி.டி.ஆர் பள்ளி என, 14 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், 100க்கு, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

அதேபோல், ஆர்.பட்டணம், ஆனந்த வித்யாலயா மெட்ரிக், ரெட்டிப்பட்டி பாரதி வித்யாலயா மெட்ரிக், துத்திக்குளம் பிருந்தாவன் மெட்ரிக், நாமகரிப்பேட்டை கலைமகள் மெட்ரிக், பேளுக்குறிச்சி கலைமகள் மெட்ரிக், நல்லிபாளையம் கொங்குநாடு மெட்ரிக், நாமக்கல் காவேட்டிப்பட்டி குறிஞ்சி மெட்ரிக், கீரம்பூர் கொங்கு மெட்ரிக் பள்ளி.

நாமக்கல் வேட்டாம்பாடி பி.ஜி.பி. மெட்ரிக், புதுச்சத்திரம் ஆர்.ஜி.ஆர். மெட்ரிக், மோகனூர் குமரிபாளையம் சரோஜினி மெட்ரிக், குருசாமிபாளையம் பாரதியா வித்யாமந்திர் மெட்ரிக், சம்பாபளிதூர் ஸ்ரீசாமி மெட்ரிக், தொப்பப்பட்டி ஸ்ரீவாணி மெட்ரிக், ஓலப்பாளையம் காவேரி வித்யாபவன் மெட்ரிக், காளப்பநாயக்கன்பட்டி பாரதி மெட்ரிக், மோகனூர் கலைமகள் மெட்ரிக் பள்ளி.

என்.புதுப்பட்டி மாடர்ன் அகாடமி மெட்ரிக் பள்ளி, குச்சிப்பாளையம் ஏ.எஸ்.எஸ். மெட்ரிக், திருச்செங்கோடு ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக், ப.வேலூர் கந்தசாமி கண்டர் மெட்ரிக், ப.வேலூர் கொங்கு மெட்ரிக், வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக், காளிப்பட்டி மகேந்திரா மெட்ரிக், எம்.கந்தம்பாளையம் எஸ்.கே.வி. மகளிர் மெட்ரிக், ராயர்பாளையம் ஸ்ரீரெங்க வித்யாலயா மெட்ரிக். பள்ளிபாளையம் எஸ்.பி.பி., மெட்ரிக், காடச்சநல்லூர் எஸ்.பி.கே., மெட்ரிக், பி.கொமராபாளையம் என்ஸ்டீன் மெட்ரிக், நாச்சிப்பட்டி ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக், சக்கராம்பாளையம் ஸ்ரீவித்யபாரதி மெட்ரிக், சூரியகவுண்டம்பாளையம் ஏ.கே.வி. மெட்ரிக், ஆர்.புதுப்பாளையம் ஜே.வி.எம். மெட்ரிக், நெம்.3 குமாரபாளையம் மெர்லின் மெட்ரிக், மாரப்பம்பாளையம் ஸ்ரீஅம்மன் மெட்ரிக் பள்ளி.

வெண்ணந்தூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக், பொத்தனூர் சாணக்கியா ஹைடெக் மெட்ரிக், குமாரபாளையம் ஏ.வி.எஸ். மெட்ரிக், நாமக்கல் ஜெய்விகாஸ் பள்ளி, நாமக்கல் காவேட்டிப்பட்டி குறிஞ்சி பள்ளி, சின்னதம்பிபாளையம் நாளந்தா பள்ளி, பிள்ளாநத்தம் ஸ்ரீ விநாயகா பள்ளி, கீரனூர் வலசு வெற்றி விகாஸ் மகளிர் பள்ளி, பிச்சாப்பாளையம் வி.ஐ.பி. பள்ளி, கோலிக்கால்நத்தம் எஸ்.பி.எம். பள்ளி, வடகரையாத்தூர் சன்ஸ்டார் பள்ளி ஆகிய 46 தனியார் பள்ளிகள், 100க்கு 100 தேர்ச்சி பெற்றுள்ளன.

Tags:    

Similar News