சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2024-04-26 10:13 GMT

தொங்கவிடப்பட்டுள்ள இறைச்சி (கோப்பு படம்).

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இறைச்சிக்கடைகளில் சுத்தமான மற்றும் சுகாதாரமான இறைச்சிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது :

அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக்காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழி, வாத்து மற்றும் காடை உள்ளிட்ட இறைச்சி கடைகளில் நன்கு வேகவைத்து சமைத்த இறைச்சிகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். நோயுற்றது போல் அறிகுறிகள் உள்ள பறவைகளை இறைச்சிக்காக பயன்படுத்தக் கூடாது. உணவகங்களில் பயன்படுத்தப்படும் இறைச்சிகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பதை உறுதி செய்து பின்பு பயன்படுத்த வேண்டும். இறைச்சி கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மருத்துவச் சான்று பெற்றிருக்க வேண்டும். மேலும் உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டங்களைப் பின்பற்றி சுத்தமாகவும் சுகாதாரமாகவும் உணவு பொருட்களை தயார் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், பொதுமக்கள் உணவுப் பொருட்கள் சம்மந்தமாக உள்ள புகார்களை 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கும், உணவுபுகார்அட்ஜிமெயில்.காம்20 என்ற இமெயில் மூலமாகவும், கூகுள் பிளேஸ்டோரில் இருந்து ஃபுட் சேப்டி கன்ஸ்யூமர் அப்ளிகேஷன் டவுன்லோடு செய்தும் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News