தர்பூசணியில் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை: நாமக்கல்லில் 22ம் தேதி இலவச பயிற்சி

தர்பூசணியில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து வரும் 22ம் தேதி நாமக்கல்லில் இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

Update: 2022-07-14 11:00 GMT

பைல் படம்.

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், வருகிற 22ம் தேதி வெள்ளிக்கிழமை 9 மணிக்கு தர்பூசணியில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை என்ற தலைப்பில் ஒருநாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் குறைந்தகாலத்தில் அதிக லாபம் தரும் தர்பூசணி ரகங்கள் பற்றியும், பயிரைதாக்கும் பூச்சி மற்றும் நோய்களின் அறிகுறிகள், அவற்றை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும், இயற்கை பூச்சிக்கொல்லிகள் தயாரித்தல், வளர்ச்சியூக்கிகள் பயன்படுத்துதல், நுண்ணூட்ட மேலாண்மை குறித்தும் தெளிவாகப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இதில் விவசாயிகள், விவசாயம் சார்ந்த களப்பணியாளர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் நேரிலோ அல்லது 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு

முன்பதிவு செய்து பயிற்சியில் கலந்துகொள்ளலாம் என வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் டாக்டர் அழகுதுரை தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News