கேஜிபிவி பள்ளியை நடத்த தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்க அழைப்பு

கொல்லிமலை கேஜிபிவி பள்ளியை நடத்த தொண்டு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Update: 2022-09-22 11:00 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் 10-14 வயதுடைய பள்ளி செல்லா / இடைநின்ற பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில், கொல்லிமலை ஒன்றியத்தில் 3 கேஜிபிவி உண்டு உறைவிடப்பள்ளிகள், கடந்த 2005ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதில் அரியூர்கிழக்குவலவு கேஜிபிவி உண்டு உறைவிடப்பள்ளி மையத்தை நிர்வகிக்க அனுபவம் மற்றும் பெண் கல்வியில் ஆர்வம் உள்ள, பதிவு செய்யப்பட்ட அரசு சாரா தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுடையவர்கள் நாமக்கல் மாவட்ட கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் வருகிற 27ம் தேதிக்குள் விண்ணப்பங்களைப் பெற்று, 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News