நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

நாமக்கல் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

Update: 2024-05-06 11:30 GMT

பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை படைத்த, நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளை, பள்ளி தாளாளர் தங்கவேல் மற்றும் நிர்வாகிகள் பாராட்டினார்கள்.

நாமக்கல் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

நாமக்கல், பரமத்தி ரோட்டில், காவேட்டிப்பட்டியில் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து, இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவி சானியா 600க்கு 593 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். மாணவர் நிதிஷ், மாணவி ஸ்ரீலேகா ஆகியோர் 600க்கு 584 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2ம் இடத்தையும், மாணவர் நிஷாந்த் 581 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடத்தையும், தினேஷ் கைலாஷ், சந்தியா ஆகியோர் 600க்கு 580 மதிப்பெண்கள் பெற்று 4ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

மேலும் பல மாணவர்கள் பாடவாரியாக 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ மாணவிகளை பள்ளி தாளாளர் தங்கவேல், இயக்குனர்கள், முதல்வர், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினார்கள்.

Tags:    

Similar News