பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சாதனை

பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

Update: 2024-05-06 09:45 GMT

பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த பரமத்தி மலர் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு, பள்ளி நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.

பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவ ஹேமசூர்யா 600க்கு 593 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். மாணவி தர்ஷினி 600 க்கு 586 மதிப்பெண்கள் இரண்டாமிடமும், மாணவி மித்ரா 600 க்கு 585 மதிப்பெண்கள் பெற்று பள்ளி மூன்றாமிடமும், மாணவி கனினிகா 600 க்கு 582 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 4ம் இடமும் பெற்றுள்ளனர்.

இப்பள்ளியில் மொத்தம் 22 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர். கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 11 மாணவர்களும், கணிதத்தில் 2 பேரும், வணிகக்கணிதத்தில் ஒருவரும், பொருளாõதாரத்தில் 3 பேரும், வணிகவியலில் ஒருவரும், அக்கவுண்டன்சியில் ஒருவரும், வேலைவாய்ப்புத் திறன்கள் பாடத்தில் 3 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை பரிந்துள்ளனர். மொத்தம் 600க்கு 590 மதிப்பெண்களுக்கு மேல் 1 மாணவரும், 580க்கு மேல் 4 மாணவர்களும், 570க்கு மேல் 11 மாணவர்களும், 550க்கு மேல் 31 மாணவர்களும், 500க்கு மேல் 81 மாணவர்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த மாணவ மாணவிகளை பள்ளி செயலாளர் கந்தசாமி, பொருளாளர் வெங்கடாசலம், துணைத்தலைவர் சுசீலா ராஜேந்திரன், துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வி தங்கராஜு, பள்ளி முதல்வர் ராஜசேகரன், இயக்குநர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News