கரூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இ. கம்யூ ஆர்பாட்டம்

கரூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-06-08 09:00 GMT

கரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டம்.

கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்டபாட்டம் நடைபெற்றது.  ஆர்பாட்டத்திற்கு  மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் நேதாஜி தலைமை வகித்தர். 

கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பண்டங்களின் விலை உயர்ந்து வருதாகவும், கச்சா எண்ணெய் 19.5 அமெரிக்க டாலராக இருப்பதால் பெட்ரோல் விலை ரூ 50 க்கும், டீசல் விலைகள் 40க்குள் நிர்ணயிக்க வேண்டும்.

கொரோனா நிவாரண நிதியாக மத்திய அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 7,000 வழங்க வேண்டும் தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு காலதாமதம் படுத்தாமல் உடனே வழங்க வேண்டும்.

செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிப்பு மையத்தில்  தமிழக அரசு தடுப்பூசி தயாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கம் எழுப்பினர்.

Tags:    

Similar News