கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
கரூரில் மாணவ- மாணவிகளுக்கான கோடை கால பயிற்சி முகாம் நாளை துவங்கி நடைபெற உள்ளது.;
கரூர் மாவட்ட அளவிலான கோடை கால பயிற்சி முகாம் நாளை தொடங்கி மே 13 வரை நடைபெற உள்ளது.
கரூர் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் வருகிற 29.04.2024 முதல் 13.05.2024 வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கரூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவின் சார்பாக மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் 2024 ஆம் ஆண்டிற்கு கரூர் மாவட்டத்தில் 29.04.2024 முதல் 13.05.2024 வரை தடகளம், கூடைப்பந்து, கையுந்துபந்து . ஜீடோ வளைகோல்பந்து மற்றும் மல்யுத்தம் ஆகிய விளையாட்டுகளுக்கு நடைபெற உள்ளது.
இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விதிமுறைகள்-
பயிற்சி முகாமில் பள்ளி கல்லுரியில் பயிலும் மாணவர் மற்றும் மாணவரல்லாத 18 வயதிற்கு கீழ் உள்ள இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் ஆதார் கார்டு நகல் கண்டிப்பாக சமர்பித்தல் வேண்டும்.
முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பங்கு பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும். கலந்து கொள்ளும் ஒவ்வொரு நபரும் வருவாய் மெசின் மூலம் மட்டுமே சந்தா தொகை ரூ. 200/- செலுத்த வேண்டும். சந்தாத் தொகையானது ரொக்கமாகப் பெறப்படமாட்டது. கலந்து கொள்பவர்கள் கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். மாவட்ட விளையாட்டு அலுவலரது தொலைபேசி எண். 7401703493 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
கரூர் மாவட்டத்திலுள்ள விளையாட்டில் ஆர்வமுள்ள வீரம்/வீராங்கனைகள் அதிக அளவில் கலந்து கெண்டு பயன்பெறுமாறு சுரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இந்த பயிற்சி முகாமில் மாணவ மாணவிகள் பங்கேற்பது அரிய வாய்ப்பாக கருதப்படுகிறது.