கரூர் மாவட்டத்தில் மே 29ம் தேதி உள்ளூர் விடுமுறை : கலெக்டர் அறிவிப்பு

கரூர் மாவட்டத்தில் மே 29ம் தேதி உள்ளூர் விடுமுறை என கலெக்டர் தங்கவேல் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

Update: 2024-05-17 11:57 GMT

கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல்.

வருகிற 29ம் தேதி கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

கரூர் மாவட்டம். கரூர் நகரில் அமைந்துள்ளது அருள்மிகு மரியம்மன் திருக்கோயில். இக்கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் வைகாசி பெருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு வைகாசி பெருவிழா தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.

வைகாசி பெருவிழாவை முன்னிட்டு இதன் முக்கிய நிகழ்வான கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி 29.05.2024 புதன்கிழமை அன்றுநடைபெற உஎள்ளது. அன்றைய தினம் உள்ளூர் அரசு விடுமுறை அளிக்கப்படுவதாக  மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கரூர் மாவட்டம் கரூர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வைகாசி பெருவிழா12.05.2024 முதல் 09.06.2024 வரை நடைபெறவுள்ளது. இதன் முக்கிய நிகழ்வான கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி 29.05.2024 புதன்கிழமை அன்று நடைபெற உள்ளது. எனவே. இந்நிகழ்வு நடைபெறவுள்ள29.05.2024 புதன்கிழமை அன்று மட்டும் கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

இந்த உள்ளூர் விடுமுறை நாளான 29.05.2024 ஆனது செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instrument Act 1881) கீழ் அறிவிக்கப்படவில்லை. ஆதலால் இந்த விடுமுறை நாளுக்குப் பதிலாக 08.06.2024 (சனிக்கிழமை) அன்று அரசு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் முக்கிய திருவிழா கம்பம் ஆற்றிற்கு அனுப்பும் திருவிழா என்பதால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்ப்டடு இருப்பது கரூர் மாவட்ட மக்கள் மற்றும் மாரியம்மனை வழிபடும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News