கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.;

Update: 2024-05-14 10:43 GMT

கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கரூர் ஆண்டாங்கோவில் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது. இந்த கிணற்றுக்கு சென்று மூன்று மாணவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். மூவரும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். நீண்டநேரம் ஆகியும் வரவில்லை என பெற்றோர்கள் அக்கம் பக்கத்தினர் தேடினர். சம்பந்தப்பட்ட கிணற்றின் அருகே வந்து பார்த்தபோது அங்கு உடைகள் இருந்ததை பார்த்து உள்ளே எட்டிப் பார்த்தனர். யாரும் தென்படவில்லை எனவே சந்தேகம் அடைந்து கரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் அளித்தனர்.

கிணற்றின் அருகில் கிடைத்த உடைகளை கண்டு மாணவர்கள் தண்ணீரில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தீயணைப்பு துறை வீரர்கள் தேடும் பணிகள் ஈடுபட்டனர். தீயணைப்பு மற்றும் மீட்பு துறை உதவி மாவட்ட அலுவலர் திருமுருகன் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் குதித்து தேடும் பணியில் ஈடுபட்டனர். கிணற்றில் மூழ்கி தேடிய போது மூன்று மாணவர்களும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

இதில்  உயிரிழந்தவர்கள் ரமேஷ் என்பவரின் மகன் அஸ்வின் (வயது12), ஸ்ரீதர் என்பவரின் மகன் விஷ்ணு (11) இளங்கோ என்பவரின் மகன் மாரிமுத்து (11)என தெரியவந்து உள்ளது.

இவர்கள் மூவரும் கரூர் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள். பள்ளிக்கு கோடை விடுமுறை என்பதால் நண்பர்களான இவர்கள் ஒன்று சேர்ந்த நீச்சல் பழக வேண்டும் என்ற ஆசையில் விவசாய கிணற்றதில் குதித்து குளித்த போது தான் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். கரூர் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News