கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் திருவிழா பற்றிய ஆலோசனை கூட்டம்

கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் திருவிழா பற்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-05-13 10:52 GMT

கம்பம் விடும் திருவிழா பற்றிய ஆலோசனை கூட்டத்தில் பேசிய காவல் துணை கண்காணிப்பாளர் மதன்.

கரூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் நடைபெறும் கம்பம் விடும் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஒரு வார காலத்திற்கும் மேல் நடைபெறும் இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது உண்டு.

பிரசித்தி பெற்ற கரூர் மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டிற்கான வைகாசி பெருவிழா நேற்று துவங்கியது. கரூர் பாலம்மாள் புரத்தில் இருந்து பாரம்பரிய முறைப்படி கம்பம் கொண்டுவரப்பட்டு கோவிலில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மாலை அமராவதி ஆற்றில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கம்பம் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது வழிநெடுக பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவிலை அடைந்ததும் கோவிலில் கம்பம் நடப்பட்டது.

கம்பம் நடும் விழா தொடங்கியதையடுத்து நாள்தோறும் பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபாடு செய்கின்றனர் . 17ம் தேதி (வெள்ளி) பூச்செரிதல் விழா நடைபெறுகிறது. 16 ,17 ம் தேதிகளில் மகா சண்டியாக பெருவிழா நடைபெறுகிறது. ‌ 19ஆம் தேதி ஞாயிறு அன்று காப்பு கட்டுதல் 27ம் தேதி திங்கள் அன்று திருத்தேர் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் 27, 28, 29 ம்தேதிகளில் அக்னிசட்டி எடுத்தல், அலகு குத்துதல், பால்குடம், மாவிளக்கு எடுத்து நேர்த்திக் கடன் நிறைவேற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கிய விழாவான ஆற்றுக்கு அனுப்பும் விழா 29ம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா கம்பம் நடுதலுடன் 12ம்தேதி தொடங்கியது. முக்கிய விழாக்களில் ஒன்றான பூச்சொரிதல் விழா வரும் 17ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பூத்தட்டு ரதங்கள் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு மாரியம்மன் வழிபாடு செய்யப்படும். பூத்தட்டு ஊர்வலத்தை சிறப்பாக நடத்துவது தொடர்பாக பூத்தட்டு விழா அமைப்பாளர்களுடன் காவல்துறை ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

மாநகர காவல் துணை கண்காணிப்பாளர்  மதன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து தொடக்க உரையாற்றினார். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மணிவண்ணன் (கரூர் நகரம்), முத்துக்குமார் (பசுபதிபாளையம்), சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்(நகரம்), தர்மலிங்கம் (வெங்கமேடு), தியாகராஜன் (நகர போக்குவரத்து) ஐயோ ஆலோசனைகளை வழங்கினர். பூத்தட்டு அமைப்பாளர்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.

Tags:    

Similar News