கரூர் மாவட்டம் மாயனூரில் பெய்தது ஆலங்கட்டி மழை

கரூர் மாவட்டம் மாயனூரில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.

Update: 2024-05-06 08:58 GMT

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு கோடை காலம் மிகவும் கொடுமையாக உள்ளது. கோடை காலத்தின் ஆரம்பமே பல மாவட்டங்களில் நூறு டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் வெயில் அளவு பதிவானது.

இந்த ஆண்டு வெயிலின் உச்சபச்சமாக கரூர் மாவட்டம் பரமத்தியில் கடந்த சில நாட்களுக்கு முன் வெயில் அளவு 110 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி இருந்தது. இதே போல் வேலூர் மற்றும்  ஈரோட்டிலும்  வெயில் அளவு அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் நேற்று 111 டிகிரி வெயில் பதிவானது. இந் நிலையில் மாலையில் மாவட்டம் முழுவதும் காற்றுடன் மழை பெய்தது. கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியில் சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது மாவட்டத்திலேயே அதிக அளவாக 30.4 மி.மீ. மாயனூரில் பதிவாகியுள்ளது. கிருஷ்ணராயபுரம் 15, கடவூர் 19, பால விடுதி 3, மைலம்பட்டி 5, மி.மீ மழை பெய்தது மாவட்டத்தில் சராசரியாக மாவட்டத்தில் 6.13 மி.மீ. மழை பதிவானது.

கரூர் மாவட்டத்தில் பெய்துள்ள மழையானது மக்களுக்கு ஓரளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News