அரவாக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லூரி: விண்ணப்பிக்க மே 20 கடைசி நாள்

அரவாக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லூரியில் பயில்வதற்கு விண்ணப்பிக்க மே 20 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-09 12:34 GMT
அரவாக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லூரி (கோப்பு படம்)

அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் இளம் கலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுத்துள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரவக்குறிச்சியில் செயல்படுகிறது. BA தமிழ், BA ஆங்கிலம், Bcom, Bsc கணிதம் மற்றும் Bsc கணினி அறிவியல் ஆகிய இளம் கலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. மாணவ, மாணவியர் விண்ணப்பிக்க கல்லூரி முதல்வர் முனைவர் வசந்தி பத்மநாபன் அழைப்பு விடுத்துள்ளார்.

இக்கல்லூரிக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பத்தை எதிர்வரும் 20/05/2024 அன்று மாலை வரை பூர்த்தி செய்ய தங்கள் வீடுகளிலிருந்தோ அல்லது இணையதளம் வாயிலாகவோ பதிவு செய்யலாம். மேலும் இணையதள வசதி இல்லாதவர்கள் இக்கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாணவர் சேர்க்கை உதவி மையம் Admission Facilitation Centre (AFC) – 2024 மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை பொறுத்தவரை தற்போது பொறியியல் கல்லூரிகளில் படிப்பதை விட கலை அறிவியல் கல்லூரிகளில் படிப்பதில் தான் மாணவ மாணவிகள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதுவும் அரசு கல்லூரிகளில் படிப்பு கட்டணம் குறைவு என்பதால் அரசு கல்லூரிகளின் மவுசு கூடி உள்ளது. அந்த வகையில் அரவாக்குறிச்சி அரசு கல்லூரியிலும் சேர்ந்து படிப்பதற்கு மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News