கரூரில் பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் தகுதி பட்டை வழங்கும் விழா

கரூரில் பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் தகுதி பட்டை வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2024-05-13 10:42 GMT

கரூரில் பள்ளி மாணவர்களுக்கு சிலம் தகுதி பட்டை வழங்கும் விழா நடைபெற்றது.

தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றான சிலம்பாட்டம் அழியும் நிலையில் இருந்து தற்போது மீண்டு வருகிறது. கிராமப்புற இளைஞர்களின் பாரம்பரிய விளையாட்டாக பல ஆண்டுகளாக இருந்து வந்த சிலம்பாட்டம் தற்போது நகர்ப்புற பள்ளிகளில் கூட ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சிலம்பாட்டம்  பயிற்சி மற்றும் சிலம்பம் தொடர்பான போட்டிகள் பல இடங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கரூர் காந்தி கிராமம் லார்ட்ஸ் பார்க் மேல்நிலைப்பள்ளியில் கிச்சாஸ் சிலம்பம் அகாடமி சார்பில் சிலம்பம் தகுதி பட்டை வழங்கும் விழா நடைபெற்றது. அகாடமி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வீரமணி வரவேற்றனர்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கரூர் மாவட்ட சிலம்பாட்டம் கழகம் தலைவர் மலையப்ப சாமி, நல்லாசிரியர் விருது பெற்ற கரூர் மாவட்ட விளையாட்டு வளர்ச்சி கழகம் தலைவர் வீர திருப்பதி . அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கேபி தாளப்பட்டி தலைமை ஆசிரியர். தங்கம், விஜயபுரம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வாசகி.கலந்து கொண்டு பேசினர்.

மாணவ மாணவிகள் அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ளவும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்குமான பாரம்பரியமான கலைகளான சிலம்பாட்டத்தில் தனது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். மாணவர்களுக்கு சிலம்பம் தகுதி பட்டம் வழங்கி சான்றிதழ் வழங்கப்பட்டது. 200க்கும் மேற்பட்ட தனியார் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News