ஓட்டல் உரிமையாளர் கொலை வழக்கு: கூலிப்படை 4 பேர் நீதிமன்றத்தில் சரண்

சிவகங்கையில் ஓட்டல் உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கூலிப்படையினர் 4 பேர் கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்

Update: 2022-02-16 14:21 GMT

மகாலிங்கம் என்கின்ற மைக்கேல் ( 27), சரவணக்குமார் ( 27), அருண்பாண்டியன் ( 20), மதன் ( 19) ஆகிய நான்கு நபர்களும் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். 

சிவகங்கையில் ஓட்டல் உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கூலிப்படையினர் 4 பேர் கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

சிவகங்கையில் ஓட்டல் உரிமையாளர் மணிவண்ணனை( 28 )நேற்று முன்தினம் இரவு 10 பேர் கொண்ட கூலிப்படையினர் வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய  4 பேர் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில்  சரணடைந்தனர்.

சிவகங்கை ராமசாமி நகர் கிருஷ்ணன் மகன்கள் இளங்கோ( 39,),  மணிவண்ணன்(28.).  இருவரும் மேலுார் ரோடு கால்நடை மருத்துவமனை எதிரே நேற்று முன்தினம் புதிதாக ஓட்டல் திறந்துள்ளனர்.  தீபாவளி அன்று காந்திவீதியில் இவர்களது சின்னம்மா மகன் விஷ்ணு அவரது நண்பரின் பட்டாசு கடையில் இருந்துள்ளார். அங்கு வந்த புதுப்பட்டியை சேர்ந்த சக்திவேல், அவரது நண்பர்கள்  வாங்கிய பட்டாசுக்கு  பணம் கேட்டபோது  அதைக் கொடுக்காமல் மிரட்டிவிட்டுச் சென்றனர்.

தகவலறிந்த  மணிவண்ணன், கடந்த 10 நாட்களுக்கு முன் விஷ்ணுவுடன் டூவீலரில் சிவகங்கை மீனாட்சி நகருக்கு சென்றார். அங்கு நின்றிருந்த சக்திவேல், முத்துப்பாண்டி , மைக்கேல், புலி(என்ற) கார்த்தி ஆகியோர் விஷ்ணுவை மறித்து தாக்கினர். இதை தடுத்த மணிவண்ணனையும்  சக்திவேல் உட்பட அனைவரையும் தாக்கினர்.

இந்த சம்பவத்திற்கு பின் இருதரப்பினரும் சமாதானம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு ஓட்டலில் இளங்கோவும், மணிவண்ணனும் வேலை செய்த போது, வீச்சரிவாளுடன் சக்திவேல் தலைமையில் 10 பேர் கொண்ட கூலிப்படையினர் அங்கு வந்து மணிவண்ணனை, வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர். இதை தடுத்த இளங்கோவன் தலையிலும் வெட்டு விழுந்தது.

சிவகங்கை எஸ்.பி., செந்தில்குமார், கூடுதல் எஸ்.பி., அன்பு, டி.எஸ்.பி., பால்பாண்டி சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அழகர், எஸ்.ஐ., மகேஸ்வரி விசாரித்து வரும் நிலையில், இந்த குற்றச்சம்பவத்தில் பின்னணி உள்ள மகாலிங்கம் என்கின்ற மைக்கேல் ( 27), சரவணக்குமார் ( 27), அருண்பாண்டியன் ( 20), மதன் ( 19) ஆகிய நான்கு நபர்களும் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் (எண்- 1 ) சரணடைந்தனர். மேற்கண்ட 4 பேரில் மகாலிங்கம் என்கிற மைக்கேல் என்பவர் மட்டும் மதுரையை சார்ந்தவர் என்பதும், மற்றவர்கள் அனைவரும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News