/* */

அஞ்சியது போதும்… சீனாவை எதிர்க்க துணிந்த தைவான்!!

அச்சுறுத்தி வரும் சீனாவுக்கு எதிராக தைவானும் ஏவுகணைகளை வீசி போர் பயிற்சியை தொடங்கி உள்ளது.

HIGHLIGHTS

அஞ்சியது போதும்… சீனாவை எதிர்க்க துணிந்த தைவான்!!
X

பைல் படம்.

சீனாவின் அண்டை நாடான தைவான் தனி நாடாக மற்ற நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட போதிலும், சீனா தைவானை தன்னாட்சி பெற்ற சீனாவின் பிராந்தியமாகவே கருதி வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி சமீபத்தில் தைவானுக்கு பயணம் சென்றது சீனாவை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் தைவானை சுற்றி ராணுவபலத்தை அதிகரித்து வரும் சீனா போர் ஒத்திகைகளிலும் ஈடுபட்டு வருகிறது. அடிக்கடி சீனாவின் போர் விமானங்கள் தைவானிற்குள் எல்லை தாண்டி பறப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடர்ந்தது போல தைவான் மீது சீனா எப்போது வேண்டுமேனாலும் போர் தொடரும் என்ற பதற்றம் இருந்து வருகிறது.

இந்நிலையில் தைவான், சீனாவின் ராணுவ ஒத்திகைகளை கூர்ந்து கவனித்து வருவதாகவும், எந்த ஒரு தாக்குதலையும் சமாளிக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் உலக நாடுகளின் ஆதரவை தைவான் கோரியுள்ளது.

இதனைத்தொடர்ந்து அச்சுறுத்தி வரும் சீனாவுக்கு எதிராக தைவானும் ஏவுகணைகளை வீசி போர் பயிற்சியை தொடங்கி உள்ளது. போர் ஒத்திகை ஏற்கனவே திட்டமிடப்பட்டது தான் எனவும் பதிலடி அல்ல எனவும் தைவான் அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும் இது குறித்து தைவான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசப் வூ இது குறித்து கூறியுள்ளதாவது, தைவான் மீதான படையெடுப்புக்குத் தயாராக சீனா பெய்ஜிங் தீவைச் சுற்றி வான் மற்றும் கடல் பயிற்சிகளைப் பயன்படுத்தி படையெடுப்புக்குத் தயாராகி வருகிறது.

தைவானில் பொதுமக்களின் மன உறுதியை பலவீனப்படுத்தும் வகையில் பெரிய அளவிலான இராணுவப் பயிற்சிகள் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள், சைபர் தாக்குதல்கள், தவறான தகவல் பிரச்சாரம் மற்றும் பொருளாதார வற்புறுத்தல் போன்றவற்றை சீனா வழி நடத்துகிறது என குற்றம்சாட்டி உள்ளார்.

Updated On: 10 Aug 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  3. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  4. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  5. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  6. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  7. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  10. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!