/* */

வாக்காளர் விழிப்புணர்வு புகைப்படக் கண்காட்சி கலெக்டர் துவக்கி வைத்தார்.

விருதுநகரில் வாக்காளர் விழிப்புணர்வு புகைப்படக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கண்ணன் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

விருதுநகர் தேசப்பந்து மைதானத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் இன்று 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி இதுவரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொகுத்து அமைக்கப்பட்ட புகைப்படக்கண்காட்சியினை துவக்கி வைத்தல் மற்றும் சவால் சக்கரம் (ஸ்பின்னிங் வீல்) வாக்காளர் விழிப்புணர்வு விளையாட்டு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான கண்ணன்., தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, வாக்காளர்களை கவரும் வகையில் நாள்தோறும் பல்வேறு அரசுத் துறைகள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில் இன்று தேசப்பந்து மைதானத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் இதுவரை நமது மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொகுத்து அமைக்கப்பட்ட புகைப்படக்கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

மேலும், தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் பொறிக்கப்பட்ட சவால் சக்கரம் (ஸ்பின்னிங் வீல்) விளையாட்டும் நடைபெற்றது. இந்த சவால் சக்கரத்தில் இடம் பெற்றிருந்த ஒவ்வொரு வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்களுக்கும் மதிப்பெண்கள் அளிக்கப்பட்டு, அதற்கேற்ப பரிசுகள் வழங்கப்பட்டன.

அதன்படி, வாக்குச்சாவடிக்கு எடுத்துச் செல்லும் 12 ஆவணங்களை நன்கு அறிவேன் என்ற வாசகத்திற்கு 20 மதிப்பெண்களும், பணம் பொருள் ஏதும் வாங்காமல் வாக்களிப்பேன் என்ற வாசகத்திற்கு 15 மதிப்பெண்களும், நான் எனது வீட்டிலுள்ள பதிவு செய்த வாக்காளர்கள் அனைவரையும் வாக்களிக்கச் செய்வேன் என்ற வாசகத்திற்கு 10 மதிப்பெண்களும், எனது வாக்குச் சாவடி அமைந்துள்ள இடம் எனக்கு தெரியும் என்ற வாசகத்திற்கு 5 மதிப்பெண்களும்,

நான் வாக்களிக்க செல்லமாட்டேன், பணம் வாங்கிக் கொண்டு வாக்குச் சாவடிக்கு செல்வேன், நான் வாக்கு அளித்தது குறித்து இரகசியம் காக்க மாட்டேன் மற்றும் சுய சிந்தனையுடன் வாக்களிக்க மாட்டேன் போன்ற வாசகங்களுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண்ணும் அளிக்கப்பட்டது.

இவ்விளையாட்டில் பங்குபெற்றவர்களுக்கு மதிப்பெண்களுக்கேற்ப வாக்காளர் விழிப்புணர்வு டி-சர்டுகள், தொப்பிகள், பேட்ஜ்கள் மற்றும் ராக்கிகள் பரிசுகளாக மாவட்ட தேர்தல் அலுவலர். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டன. பூஜ்ஜிய மதிப்பெண் பெற்றவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Updated On: 29 March 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  5. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  7. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  9. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!