/* */

வாழ்க்கையில் வெற்றி பெற குடும்ப பின்னணி முக்கியமில்லை: விருதுநகர் ஆட்சியர்

தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்புப் பயிற்சி மையங்களில் பயின்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் ஆட்சியர் அறிவுரை

HIGHLIGHTS

வாழ்க்கையில் வெற்றி பெற குடும்ப பின்னணி முக்கியமில்லை: விருதுநகர் ஆட்சியர்
X

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்புப் பயிற்சி மையங்களில் பயின்று முறைசார் பள்ளியில் 10/12ம் வகுப்பு முடித்து தற்போது உயர்கல்வி பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு தமிழக அரசின் 2020-21ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை தலா ரூபாய் 6000/- வீதம் 43 மாணவர்களுக்கு ரூபாய் 2,58,000/-யை மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசும்போது:

தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் கடந்த 1987 முதல் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 9வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளிசெல்லா குழந்தைகள், தீப்பெட்டி, பட்டாசு தொழில், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டு திட்டச் சிறப்புப்பயிற்சி மையங்களில் சேர்த்து 5ஆம் வகுப்பு வரை கல்வி கற்பிக்கப்பட்டு, பின்னர் முறைசார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட அவர்களை தொடர் கண்காணிப்பு செய்யப்படுகிறது.

அவ்வாறு சேர்க்கப்பட்ட மாணவர்கள் 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று தொடர்ந்து, உயர்கல்வியான தொழில்நுட்ப கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையம், நர்சிங், கேட்டரிங், ஐ.டி.ஐ, இளங்கலை பட்டம், பொறியியல் படிப்பு, சட்ட படிப்பு மற்றும் மருத்துவம்; பயிலும் மாணவர்களுக்கு அவர்களின் படிப்பு காலம் முடியும் வரையில் தமிழக அரசு மாதந்தோறும் ரூபாய் 500/- உதவித்தொகையாக வழங்கி வருகிறது.

அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு வழங்கிய 2020-21 ஆம் நிதியாண்டிற்கான உதவித்தொகை தலா ரூபாய் 6000/- வீதம் 43 மாணவ/மாணவியர்களுக்கு வரைவு காசோலையாக ரூபாய் 2,58,000/- வழங்கப்பட்டுள்ளது.

குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீண்டு வந்துள்ளீர்கள். உங்களுக்கு நீங்களே வழிகாட்டி. வாழ்க்கையில் தொடக்கமோ, குடும்ப பின்னணியோ முக்கியம் அல்ல. தங்களுக்கான குறிக்கோள்கள், கனவு, இலக்கு ஆகியவற்றை வகுத்து கொண்டு அதை நோக்கி தன்னம்பிக்கையுடனும், அர்பணிப்பு உணர்வுடனும் முழுமையான ஈடுபாட்டுடனும் கடுமையாக உழைத்தால் இலக்கை எளிதாக அடைந்து வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் சாதிக்கலாம்.

மேலும், மனதில் உள்ள அச்சத்தை முதலில் நீக்கி, தைரியத்துடன் செயல்படுங்கள். வாழ்க்கையில் கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி உயர்ந்த நிலையை எட்டினால் உங்களை சுற்றி உள்ளவர்களின் வாழ்க்கையும் உயரும். நீங்கள் சந்தித்த தோல்விகளில் இருந்து படிப்பினை பெற்று வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்ற வேண்டும். என்று கூறினார்.

தான் சாதாரண விவசாய குடும்பத்தில் இருந்து ஐ.ஏ.எஸ்.(IAS) பயிற்சிக்கு சென்றதாகவும், ஐ.ஏ.எஸ்.(IAS) படிப்பதற்கு குடும்ப பின்னணி முக்கியமில்லை என்றும், கடின உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால் எளிதில் வெற்றி பெறலாம் என்றும் கூறினார்

மேலும், தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார். எங்கு இருந்தாலும், எப்படி இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள் அது தான் வாழ்க்கையின் நோக்கம் எனவும், தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் கீழ் பயிலும் மாணவ, மாணவியர்கள் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி கூறினார்.

முன்னதாக, போக்ஸோ சட்;டம் மற்றும் குழந்தை தொழிலாளர் சட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசுரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) காளிமுத்து, துணை ஆட்சியர்(பயிற்சி) ஷாலினி, தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் நாராயணசாமி, மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 July 2021 1:25 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  3. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  6. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  7. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  8. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  9. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  10. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...