/* */

உபரி உணவை வீணாக்காமல் பகிர திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

Tiruvannamalai Collector News Today -உபரி உணவை வீணாக்காமல் பகிர்வோம் திட்ட விழிப்புணர்வு வாகனத்தை திருவண்ணாமலை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

உபரி உணவை வீணாக்காமல் பகிர திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
X

ஆட்சியர் முருகேஷ்  விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Tiruvannamalai Collector News Today - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் மூலம் உபரி உணவை வீணாக்காமல் பகிர்வோம் திட்டத்தின் பிரத்யேக விழிப்புணர்வு வாகன தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கி விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் 50 பேருக்கு மேல் உணவு இருந்தால் தொடர்பு கொள்வதற்கு 90877 11112 என்ற தொலைபேசி எண்ணை அறிமுகம் செய்தார். பின்னர் அவர் கூறுகையில், உணவகங்கள் விற்பனை செய்தது போக மற்றும் திருமண மண்டபம், சமுதாயக் கூடம், வீடுகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் தயாரிக்கும் உணவுகளில் மீதமுள்ள 50 பேருக்கு மேல் உட்கொள்ளும் தன்மையுள்ள உணவினை இந்த எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். உணவு பாதுகாப்பிற்கான உறுதி செய்யும் வகையில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் திருவண்ணாலை மாவட்டத்தில் 15 நாட்கள் செயல்பாட்டில் இருக்கும் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் எழில்சிக்கயராஜா, கலைஷ்குமார் மற்றும் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 Jun 2022 9:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...