/* */

திருவண்ணாமலை வட்டார உர விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு

திருவண்ணாமலை வட்டாரத்தில் உள்ள மொத்த மற்றும் சில்லரை உர விற்பனை நிலையங்களில் வேளாண்மை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை வட்டார உர விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு
X

திருவண்ணாமலை வட்டாரத்தில் உள்ள மொத்த, சில்லரை உர விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருவண்ணாமலை வட்டாரத்தில் உள்ள மொத்த மற்றும் சில்லரை உர விற்பனை நிலையங்களில் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல், வேளாண்மை உதவி இயக்குனர் (தர கட்டுபாட்டு) விஜயகுமார், உதவி இயக்குனர் அன்பழகன், வேளாண்மை அலுவலர்கள் அற்புதசெல்வி, சத்தியநாராயணன் ஆகியோர் திடீரென ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது விற்பனை முனையக் கருவி மூலம் விவசாயிகளுக்கு உரங்கள் வழங்கப்படுதல், தகவல் பலகையில் உரங்களின் விலை விவரங்கள் விவசாயிகள் பார்வைக்கு தெரியும்படி வைக்கபட்டிருத்தல், உண்மை இருப்பு மற்றும் விற்பனை முனையக் கருவில் உள்ள இருப்பு வேறுபாடு இல்லாமல் இருத்தல், அரசு நிர்ணயித்த விலைக்கு மிகாமல் உரங்கள் விற்பனை செய்தல், உர விற்பனை நிலையங்களில் உர உரிமங்களின் காலாவதி நாள், கொள்முதல் செய்யப்பட்ட உரங்களின் உரிய ஆவணங்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்வது, விவசாயிகள் விரும்பாத இதர இடுபொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்வது தெரியவந்தால் உர கட்டுப்பாட்டு ஆணை 1985-ஐ மீறிய செயல்களுக்காக சம்பந்தப்பட்ட உர விற்பனை நிலையங்களின் உர உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Updated On: 12 May 2022 7:04 AM GMT

Related News