/* */

மின் இணைப்பு வழங்க லஞ்சம்: மின்வாரிய பெண் அதிகாரி கைது

திருவண்ணாமலை அருகே வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரியை லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

HIGHLIGHTS

மின் இணைப்பு வழங்க  லஞ்சம்: மின்வாரிய பெண் அதிகாரி கைது
X

கைது செய்யப்பட்ட அதிகாரி தேவி

திருவண்ணாமலை அருகே வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரியை லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை தாலுகா சீலப்பந்தல் மதுரா மோட்டூர் கிராமம் குளக்கரைவாடி பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 80). இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவரது இளைய மகன் அதே பகுதியில் வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கக்கோரி வெங்கடாசலம் அவரது மகனுடன் கடந்த 21-ம் தேதி மல்லவாடி இளநிலை பொறியாளர் அலுவலகத்தை அணுகியுள்ளார்.

அப்போது அங்கு பணியில் இருந்த வணிக ஆய்வாளர் தேவி, அவர்கள் கொண்டு வந்த ஆவணங்களை பெற்றுக்கொண்டு இந்த வேலையை நான் முடித்து தருகிறேன். எனக்கு ரூ.16 ஆயிரம் கொடுங்கள் என்று சொன்னதாக தெரிகிறது. மேலும் ஆன்லைன் பரிவர்த்தனை முழுவதும் நானே பார்த்துக்கொள்கிறேன் என்றும் அவர் சொல்லி அனுப்பி உள்ளார். இந்த பணத்தை உயர் அதிகாரிகளுக்கும் தர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து தேவி தனது உதவியாளருடன் 24-ம் தேதி மதுரா மோட்டூர் கிராமத்திற்கு சென்று மின் இணைப்பு வேண்டி விண்ணப்பிக்கப்பட்ட மாடி வீட்டை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து வெங்கடாசலம் 27-ம்- தேதி மல்லவாடி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று தேவியிடம் கேட்ட போது ரூ.16 ஆயிரம் இல்லாமல் என்னால் மின் இணைப்பு வழங்க முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது.

அதற்கு வெங்கடாசலம் டெபாசிட் தொகை ரூ.5 ஆயிரம் மட்டும் தானே என்று கூறியுள்ளார். அதற்கு ஆமாம் எனக்கு மேல் உள்ள அதிகாரிகளுக்கு லஞ்சமாக பணம் கொடுக்க வேண்டி இருப்பதால் மேற்கொண்டு ரூ.10 ஆயிரம் எனக்கு வேண்டும் என்று அவர் கூறியதாக தெரிகிறது. அதற்கு வெங்கடாசலம் கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள் என்று சொல்லியதற்கு ரூ.1000 குறைத்து ரூ.15 ஆயிரம் கட்டாயமாக கொடுக்க வேண்டும். இல்லையென்றால் இந்த இணைப்பு உங்களால் பெற இயலாது என்று அவர் கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத வெங்கடாசலம் இது குறித்து லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையில் புகார் செய்தார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையில் ஆய்வாளர்கள் ஹேமமாலினி, மைதிலி மற்றும் காவலர்களுடன் மின்சார வாரிய வணிக ஆய்வாளர் தேவியை பொறிவைத்து பிடிக்க முடிவு செய்தனர்.

அதன்படி ரசாயனம் தடவிய ரூபாய் 15 ஆயிரத்தை வெங்கடாஜலத்திடம் கொடுத்த அனுப்பி அவரை பின்தொடர்ந்தனர். மின்வாரிய அதிகாரி தேவியிடம் வெங்கடாசலம் பணத்தை கொடுத்தார் அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தேவியை பிடித்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அதிகாரி தேவியை ஊழல் தடுப்பு வழக்குகள் நீதிமன்ற சிறப்பு நீதிபதி முன்பு ஆஜர் படுத்தினர் தேவியை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த மாதம் இதே மின்சார துறையில் திருவண்ணாமலையில் போர்மேன் ரேணு என்பவர் லஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டார். அடுத்தடுத்து மின்வாரிய துறையில் லஞ்சம் வாங்கி ஊழியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மின்சாரத்துறை அலுவலர்கள், ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மின்சாரத் துறையில் கை நீட்டும் அலுவலர்களுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள பெண் அதிகாரி தனக்கு மேல் உள்ள அதிகாரிகளுக்கு எல்லாம் இந்த பணத்தை தர வேண்டும் எனக் கூறியுள்ள நிலையில் அவர்களையும் காவல்துறை விசாரணை செய்ய வேண்டும் என மின்வாரிய ஊழியர்கள் கூறினர்

Updated On: 30 March 2023 1:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  4. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  8. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  9. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  10. சோழவந்தான்
    சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில், மே.1-ம் தேதி குருப்பெயர்ச்சி:...