/* */

திருவண்ணாமலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை: முன்னேற்பாடுகள் தீவிரம்

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு முதலமைச்சர் வருகையை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் அமைச்சர் எ.வ.வேலு, வேலூர் டி.ஐ.ஜி ஆய்வு மேற்கொண்டனர்

HIGHLIGHTS

திருவண்ணாமலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை:  முன்னேற்பாடுகள் தீவிரம்
X

முதல்வர் வருகையை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை, அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா, மாவட்ட ஆட்சியர் முருகேஷ், ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்

வருகிற 8 மற்றும் 9ம் தேதிகளில் திருவண்ணாமலையில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தர உள்ளார்.

தமிழக முதல்-அமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு முதலமைச்சர் வருவதால் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

வருகிற 8-ந் தேதி மாலை திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சியில் புதிதாக பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ள அண்ணா நுழைவு வாயில் மற்றும் அதன் அருகில் திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டு உள்ள கருணாநிதி உருவ சிலையையும் முதல்- அமைச்சர் திறந்து வைக்கிறார்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையானது 3 அடி தளத்துடன் 10 அடி பீடத்தில் 9 அடி உயரம் கொண்ட வெண்கலத்தினாலான சிலையாக அமைக்கப்பட்டு உள்ளது.

பின்னர் ஈசான்ய மைதானத்தில் நடைபெறும் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

9-ந் தேதி காலை திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் எதிரில் உள்ள மைதானத்தில் நடைபெறும் பல்வேறு துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார்.

இதை முன்னிட்டு இன்று காலை புதிதாக அமைக்கப்பட்டு உள்ள அண்ணா நுழைவு வாயில் மற்றும் கருணாநிதி சிலையை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து ஈசான்ய மைதானத்தில் கட்சி பொதுக்கூட்டத்திற்காக அமைக்கப்பட உள்ள பந்தல் குறித்தும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ள திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பந்தல் அமைக்கும் பணியையும் அமைச்சர் பார்வையிட்டார். அப்போது பணிகளை தொய்வின்றி வருகிற 7-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் முருகேஷ், சி.என்அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்.எல்.ஏ., வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கோட்ட பொறியாளர் முரளி, தி.மு.க. மருத்துவர் அணி துணைத்தலைவர் கம்பன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Updated On: 4 July 2022 2:25 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்..!
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 124 கன அடியாக அதிகரிப்பு
  3. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 55 அடியாக உயர்வு..!
  4. காஞ்சிபுரம்
    கருத்து கணிப்புகளை ஏற்கவோ அல்லது புறந்தள்ளி விடவோ முடியாது..!
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. கல்வி
    அரசு மாணவர்களுக்காக 37 லட்சம் வங்கிக் கணக்குகள்: அஞ்சல் துறையுடன்...
  7. திருவண்ணாமலை
    கோடைகால பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பாராட்டு...
  8. ஈரோடு
    அறச்சலூர் நவரசம் கல்லூரியில் சக்ரா சதுரங்க வல்லபாநாத் கோப்பைக்கான செஸ்...
  9. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் 9ம் தேதி குரூப் 4 தேர்வு: 51,433 தேர்வர்கள்...
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா ஊர்வலம்